பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧龙锡 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் போற்றுகின்றார். அன்று முதல் விஷ்ணு சித்தர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளையே எம்பெருமானுக்குக் சாத்து விக்கின்றார். கோதையார்-சூடிக் கொடுத்த சுடர்க் கொடியார் ~ வளர்ந்து மங்கைப் பருவம் எய்தியதும் எம்பெரு மானையே காதலனாக வரிக்கின்றார். மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வழக்கில்லேன்' என்றும், மாலிருஞ்சோலை எம்மாயற்கல்லால் மற்றொருவர்க்கு என்னைப் பேச ஒட்டேன்’ என்றும் பிடிவாதம் பிடிக் கின்றார். 'மத்தளம் கொட்ட வரிசங்கம் கின்றுத முத்துடைத் தாம் கிரைதாழ்ந்த பங்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழிகான்' !தாமம்-மலை; நிரை-திரள்; கைத்தலம்-கை) என்று தன் கனவைத் தோழியிடம் கூறுகின்றார். எம் பெருமானைப் பற்றிய நினைவே ஒருநாள் திருச்சங்காழ் வானிடம் பேசத் தூண்டுகின்றது. 'கற்பூரம் காதுமோ? கமலப்பூ காதுமோ? திருப்பவளச் செவ்வாய்த்தால் தித்தித் திருக்குமோ? கருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே’’’ என்று அவனிடம் பேசுகின்றார். இங்கனம் தன் மகள் வாய் வெருவுவதைக் கண்ட விஷ்ணு சித்தர் மிகவும் கவலை அடைகின்றார். - ஆழ்வார் கனவில் திருவரங்கச் செல்வன் தோன்றித் தாமே கோ ைதயாரைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லுகின்றார். வில்லிபுத்து ரில் 19, நாச், திரு. 6.6 20. டிை 1:1