பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘爱盘 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் நல்குகின்றனர். இவற்றையெல்லாம் கண்டு களித்த வண்ணம் மாதவிப் பந்தல், மணிமண்டபம், ஆண்டாள் சுக்கிரவாரக் குறடு ஆகியவற்றைக் கடந்து அர்த்த மண்டபத்திற்கு வருகின்றோம். அர்த்த மண்டபத்திற்கு அடுத்து இருப்பதுதான் கருவறை, இங்குத்தான் ஆண்டாள், அரங்கமன்னார், பெரியதிருவடி ஆகிய மூவரும் சேவை சாதிக்கின்றனர். நடுவில் அரங்கமன்னாரும், அவருக்கு வலப்பக்கத்தில் ஆண்டாளும் இடப்பக்கத்தில் பெரிய திருவடியும் எழுந்தருளியுள்ளனர்; இங்கு நாம் வந்ததும், கோலச் சுசிசங்கை மாயன்செல் வாயின் குணம் வினவும் சீலத் தனள், தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் மாலைத் தொடைத்தென் னரங்கருக் கீயும் மதிப்புடைய சோலைக் கிளி, அவள் தூயகற். பாதம் துணைநமக்கே’’’ என்ற பாசுரத்தை மிடற்றொலியில் சேவித்து அன்னை யாரை வணங்குகின்றோம். அரங்கநாதர் திருமணக் கோலத்துடன் கூடிய அரச கோலத்தில் இராச கோபாலனாகக் கையில் செங்கோல் ஏந்திய வண்ணம் காட்சி நல்குகின்றார். ஆண்டாள், கோலங்கள் யாவும் புனைந்த கோமகளாக அவர் பக்கத்தில் நிற்கின்றார். ஏனைய திருக்கோயில்களில் எம்பெருமானுக்கு எதிரே நின்று சேவை சாதிக்கும் கருடாழ்வார் அரங்கநாதர் பக் கத்தில் ஏகாங்கியாய் எழுந்தருளியிருப்பதன் காரணத் தைச் சிந்திக்கின்றோம். ஆண்டாளை மணம் புரிவதற்கு அரங்கநகரிலிருந்து அரங்கநகர் அப்பனைக் காற்றினும் கடுகிய வேகத்துடன் வில்லிபுத்துளரில் கொண்டு வந்த ജ്ഞു. 21. நாச் திரு தனியன்.