பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தண்காலூர் அப்பன் 135 |தலை -திருப்பதிகளில் தலைமையான; தமர்-பக்தர் கள்; உள்ளும்-தியானிக்கும்; தண்பொருப்பு-அழகிய திருமலை; வேலை-திருப்பாற்கடல்; மாமல்லை-மாமல்ல புரம்; ஏவல்ல. எதிரிகளை முறியடிக்கவல்ல.) - என்பது பூதத்தாழ்வார் பாசுரம். இதில் அன்பருடைய நெஞ்சகம், தஞ்சைமாமணிக் கோயில், திருவரங்கம், திருத்தண்கால், திருமலை, திருப்பாற்கடல், மாமல்லபுரம், திருக்கோவலூர், திருக்குடந்தை என்னுமிடங்கள் எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடங்களாகக் குறிப் பிடுகின்றார் ஆழ்வார். இவை 108 திருப்பதிகளில் மற்று முள்ளவற்றிற்கும் உபலட்சணம். இவற்றைவிட அன்ப ருடைய நெஞ்சகமே மிகவும் உவப்பாக இருக்கும் என்பதை குறிப்பிடவே 'தமருள்ளம்’ என முற்படக் கூறப்பெற்றது என்பதனையும் அறிகின்றோம், திருமங்கையாழ்வார் திருவரங்கம் மீதுள்ள திரு மொழியில், பேராணைகுறுங்குடிஎம் பெருமானை திருத்தண்கால் ஊரானை, கரம்பலூர் உத்தமனை.’’’ (பேர்-திருப்பேர் ந்கர்;கரம்பனூர்-உத்தமர் கோயில்) என்று குறிப்பிடுவர். திருப்பேர்நகர் முதலான இடங்களில் சேவை சாதிப்பவனும் பிரளய காலத்தில் கடலேழும் மலை யேமும் உலகேமும் அமுது செய்தவனுமாகிய எம்பெரு மானைத் திருவரங்கத்தில் கண்டதாகக் கூறுகின்றார். திருநெடுந்தாண்டகத்தில் இவ்வாழ்வார் பாசுரம் தாய்ப் பாசுரமாகச் செல்லுகின்றது. 5. பெரி. திரு 5.6:2