பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தண்காலுசர் அப்பன் 1 'மாறுபட வாடைஎனும் வன்கால்வங் தென்முலைமேல் ஊறுபட ஊர்ந்த உளைவெல்லாம்-மாறத் திருத்தண்கால் ஊரான் திருத்தண் துளாயின் மருத்தண்கால் ஊராதோ வாய்ந்து.' (மாறுபட-விரோதமாக; வன் கால்-வலியகாற்று; ஊர்ந்த தவழ்ந்ததனால் உண்டாக்கிய; உளைவு-வருத்தம்; மாறநீங்கும்படி; மரு-மணம் பொருந்திய, தண்கால்-குளிர்ந்த காற்று; வாய்ந்து-இனிதாகப் பொருந்தி.) என்பது பாசுரம், இதனையும் ஓதி உளங்கரைகின்றோம். இது தலைவனைப் பிரிந்த தலைவி வாடைகை இரங்கிக் வருந்திக் கூறுவதாக அமைந்துள்ளது. தலைவனுடன் கூடிப் பிரிந்த தலைமகளின்மீது காமத்தை மிகுதிப் படுத்துவதான வாடைக் காற்று வீசி அவளை வருத்து கின்றது. அதனை ஆற்றமுடியாத தலைவி தலைவனு: டைய சம்பந்தம் பெற்ற பொருளின் தொடர்பினாலாவது ஒருவாறு இந்நோய் தணியப் பெறலாம் என்று கருது கின்றாள். தலைவன் அணிந்த திருத்துழாயின்மீது பட்டு அந் நறுமணத்துடன் வருகின்ற காற்றாவது தன் மீது வீசப்பெறுமோ என்று ஏங்கிக் கூறிச் செல் வதாக அமைந்துள்ளது இப்பாசுரம். நாமும் தலைவி நிலையை எய்தியதாகப் பாவனை செய்து கொண்டு இதனை ஒதுகின்றோம். அந்நிலை ஏற்படப் பரம பக்தி நிலை வரவேண்டும். திருக்கோயிலை விட்டு வெளிவந்து முன் மண்டபத் தில் ஓரிடத்தில் அமர்கின்றோம். நம் சிந்தனை சிலப்பதி 8. நூற். திருப். அந் 45