பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4% பாண்டி நாட்டுத் திருப்பதிகள் காரக் காலத்திற்குச் செல்லுகின்றது. கட்டுரைக் காதையில் மதுராபுரித் தெய்வம் கணவனை இழந்த கண்ணகிக்கு ஆறுதல் கூறும் போக்கில் அவளது பழம் பிறப்பை எடுத்துக் கூறுகின்றாள். அப்பொழுது அவள் தென்னவன் தீது இலன்' என்பதை விளக்கும் முறையில் சில நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டுகின்றாள். அவற்றுள் ஒன்று பராசரன் என்ற அந்தணன் வரலாறு. இவன் சோழ நாட்டைச் சேர்ந்தவன் சேரவேந்தனின் கொடைத்திறம் கேட்டு காடும் நாடும் ஊரும் கடந்து சேரநாட்டை அடைகின்றான். சேரன் அவையில் உள்ள பல சாத்திர வல்லுநர்களுடன் சொற் போர் புரிந்து பார்ப்பன வாகை சூடித் தன் வெற்றிக்குப் பொருத்தமாகச் சேரமன்னன்பால் நல்ல அணிகலன்களையும் பரிசிலாகப் பெற்றுக் கொண்டு தன் ஊர் நோக்கி மீண்டும் வருபவன் இத் திருத்தங்கால்’ {தண்கால்) என்ற ஊரில் அரசமரத்தையுடைய ஒரு மன்றத்தின்கண் தங்கி இளைப்பாறுகின்றான். தன. ஊன்றுகோல், குண்டிகை, வெள்ளைக்குடை, சமித்துகள் இவற்றையும், பரிசிலாகப் பெற்றப் பண்டங்களையு முடைய ஒரு சிறிய மூட்டையையும் மிதி அடியையும் தன் அருகில் நிலத்தின்கண் வைத்து இளைப்பாறு கின்றான். - - இளைப்பாறுகின்றவன் சும்மா இருக்கவில்லை. தனக்குப் பரிசில் நல்கிய சேரனைப் பலவாறு வாழ்த்து, கின்றான். அந்த வாழ்த்தொலியைக் கேட்ட அம்மன் றத்தின் கண் விளையாடிக் கொண்டிருந்த அந்தணச் சிறுவர்கள் அப்பராசரனைச் சூழ்ந்து கொள்ளுகின்றனர். அந்தணன் அச்சிறுவர்களை நோக்கி 'பிள்ளைகாள், தும்மில் எவரேனும் என்னோடு சேர்ந்து மறையினை ஒதவல்லீராயின் இச்சிறிய மூட்டையைப் பரிசிலாகப் பெறுவீர்” என்ற அறிவிக்கின்றான். உடனே வார்த்திகன் என்னும் அந்தணனின் செல்வமகன் தட்சிணாமூர்த்தி