பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置留4 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் (ஒசிந்த-துவண்ட, நொந்து-நோவு பெற்று; கசிந்தஈரமான, துளும்ப-பெருகும்படி) வழி நடக்கும்போது சிறிதும் சிரமமின்றி நடந்து செல் பவர்கள் கையை வீசிக்கொண்டுபோவர், சிரமத்தில் இளைத்துக் செல்பவர்கள் இடுப்பின் மீது கையை ஊன்ற வைத்துக்கொண்டு சிரமம் தெளிவாகப் புலனாகும்படி செல்வர். உலகிற்காணும் இந்த இயல்பினை எண்ணு கின்றாள் திருத்தாயார். 'திருக்கோளூர் எம்பெருமான் மீது கழிபெருங் காதல் கொண்டவள் ஊராரின் பழி மொழிகட்கும் அஞ்சாமல் எம்மையும் ஒரு பொருளாக மதியாமல் சென்றனளே.' என்கின்றாள். இங்ங்ன மெல்லாம் தன்னருகிலுள்ளாரைப் பார்த்துச் சொல்லி அலமந்த திருத்தாயார் இறுதியாக ஆகாயத்தை நோக்கி, :அந்தோ! திருக்கோளுர்க்குப் போ ன வ ள் எம் பெருமானைச் சேவித்துத் திரும்பலாகாதோ? அவ்விடத் திலேயே மண்டி விட்டாளே! அவண் உறையும் செந்தாமரைக் கண்ணனை ஒரு கணநேரமும் விட்டுப் பிரியாத நிலையிலுள்ளாளே! இக்குடிக்கு வரும் பெரும் பழியையும் நினையாமல் கிடக்கின்றாளே!' என் கின்றாள். இங்ங்ணம் இத் திவ்விய தேசம்பற்றிய திருவாய் மொழியில் ஆழங்கால்பட்ட வண்ணம் திருக்கோயிலை அடைகின்றோம். கிடந்த திருக்கோலத்தில் புயங்க சயனம்கொண்டு கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத் துடன் சேவை சாதிக்கும் வைத்த மாநிதியையும் கோளுர் வல்லி காச்சியாரையும் வணங்குகின்றோம். திருவாய் மொழி முழுவதையும் சந்நிதியில் மிடற்றொலியாக ஒதி உளங்கரைகின்றோம். இத்திருவாய்மொழியை, 19. ഒു. 6.7:9 20. ഒു. 6.7:10