பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோளுர் வைத்தமாநிதி 173 தாயார்," தன் வயதுக்குரிய விளையாட்டிலும் பொருந் தாத என் மகள் எம்பெருமானுடைய ஊரில் சோலைகளை யும் தடாகங்களையும் அவனுடைய திருக்கோயிலை யும் கண்டு தன் நெஞ்சு குளிரும்படி எங்ங்னம் களித் திருக்கின்றாளோ? அறிகிலேன்' என்று தளர்கின்றாள்.'" தன் மகள் நிலையைக் குறித்துத் திருத்தாயார் இங்ங் ைம் ஊகிக்கின்றாள்: 'துணையின்றி வருந்திச் சென்றவள் தன்னைச் சிறப்பாகக் கவர்ந்த எம்பெரு மானின் திருக்கண்களை முந்துற முன்னம் நோக்குவள். அர்ச்சாவதார சமாதியையும் கடந்து விம்மி வெளி விழுகின்ற, தெளிவாகாத, இனிய புன்முறுவல் பொங்கு மிடமான செவ்வாயைப் பிறகு காண்பள். இந்த இரண்டு திவ்விய அவயவயங்களையும் கண்டவள் பெரு வெள்ளத்தில் இளகின கரைபோலே உடைகுலைப்பட்டு தைந்து கொண் டிருப்பள்' 'நீர் நிரம்பிய கண்களையும் கழிபெருங் காதலையுடைய நெஞ்சையும் உடைய என் மகள். அல்லும் பகலும் நெடுமாலே! என்று கூவிக்கொண்டிருந்தாள். இப்போது ஒடுங்கியொடுங்கி அசைந்து நடந்து தளர்ந்த நிலையில் அத்திருக்கோளுர்க்கு எப்படிப்போய்ச் சேர்ந் திருப்பாளோ?’ என மனங் கவல்கின் ஐாள், ! தன் மகள் வழியில் நடந்து செல்லும் நிலையை, அவள் மேனியின் மெலிவை, ஈரதெ ஞ்சினை, கண்ண நீர் பெருகும் காட்சியை அநுசந்திக்கும் திருத்தாயாரின் வாக்கு இது: 'ஒசிந்த ஆண்ணிடை மேல் கையை வைத்து கொந்துகொந்து கசிந்த நெஞ்சின ளாய்க்கண்ண நீர் துளும் பச் செல்லுங்கொல்?’** 14. திருவாய் 6.7:4 15. ഒു. 6.7:5 16. ഒു. 6.7:6 17. ഒു. 6.??? 18. ഒു. 6.7:8