பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் இராமன் திருமணம் புரிந்துகொண்டபின் பிராட்டியுடன் மிதிலை நகர் வலம் வருங்கால் அவனுடைய அழகினை அநுபவித்த பெண்களைக் கூறுங்கால், தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைகண் டாரும் அஃதே ' என்று கம்பநாடன் கூறுவதைப் போலவே, ஆழ்வார் நாயகியின் திருவுள்ளம் தனித்தனி வடிவுகொண்டு ஒவ்வொரு உறுப்பிலும் தனித்தனியே சுழியாறுபட்டது என்று அறிதல்வேண்டும். இவ்விடத்தின் நம் பிள்ளை ஈடு: லெளபரி என்பானொருத்தன் ஒரு ஸலக்ருதமடியாக ஐம்பது வடிவு கொண்டானிறே; அவ்வள வல்லவிறே இவள் கலந்து விஷயம் பண்ணவல்லது. அவன் வ்யக்திதோறும் பரிஸுமாப்ய வர்த்திக்குமாபோலவாயிற்று இதுவும் அவய வங்கள் தோறும் தனித்தனி அகப்பட வல்லபடி?’ நான் 22. கம்ப. பால. உலாவியற்.19 23. லெளபரி என்பவன் ஒரு மாமுனிவன். இவன் நீர் நிலையிலிருந்து தவம் புரிகையில் அங்கு மீன்கள் கூடிக் களித்து விளையாடா நின்றமையைக் கண்ணுற்று தானும் குடும்ப வாழ்க்கையில் கூடி நின்று சிற்றின்பம் நுகர்ந்து களிக்க வேண்டும் என்று ஆவல் கொள்கின்றான். பலபெண் பிள்ளைகளைப் பெற்ற மாந்தாதா என்னும் அரசனிடம் சென்று தனக்குக் கன்னிகாதனம் செய்யுமாறு வேண்ட, அவ்வரசனும் கிழத்தனத்தையும் குரூர வடிவத்தையும் கண்டு இசையாது. முனிவன் சாபத்திற்கஞ்சி பெண்களிடம் அனுப்புகிறான் முனிவன் தன் தவவலிமையால் அழகான வடிவம் கொண்டு செல்ல, எல்லாப் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு அவனை மணக்கின்றனர். முனிவன் தன் தவவலிமையால் ஐம்பது வடிவமெடுத்து அப் பெண் களை மணந்து மகிழ்ந்தான் என்பது புராண வரலாறு.