பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பேரெயில் மகரநெடுங் குழைக்காதன் 19 i தன்னை இழந்தேன்; தாய்மார் தோழிமார் என்னை இழந்தனர்; நெஞ்சு நானும் நிறையும் இழந்தது' என்று அங்கலாய்க்கின்றாள் ஆழ்வார் நாயகி. அன்னை மார்கள் தன்னை முனிகின்றனர் என்று கருதி மேலும் கூறுகின்றாள்:

  • இழந்த எம்மாமை திறத்துப் போன

என்னெஞ்சி னாருமாங் கே ஒ ழிக்தார் உழந்தினி யாரைக்கொண் டென்உ சாகோ? முழுங்குசங் கக்கையன் மாயத்து ஆழ்க்தேன் அன்னையர் காள்என்னை என்மு னிக்தே: (உழந்து - வருந்தி, உசாவுதல் - ஆராய்தல்; மாயம்ஆச்சரிய குணங்கள்.) 'இழந்த என் மாமை நிறத்தை மீட்டுக்கொண்டு வருவதாக வீரவாதம் செய்து சென்ற என் நெஞ்சும் அங்கே தகர்ப் புண்டது. என் செய்வேன்? இனி யாருடன் எதனைக் சொல்லிப் பொழுதுபோக்குவேன்?' என்கின்றாள். பகவத் விஷயத்தில் ஈடுபட்ட அதிசயத்தைப் புலப்படுத்தவே ஆழ்வார் நாயகி நெஞ்சினை நெஞ்சினார்' என்று உயர்வு பொருளாகக் கூறுகின்றாள். ஆரைக்கொண்டு உச கோ: என்ற விடத்து இன்சுவை மிக்க நம் பிள்ளை ஈட்டையும் நினைக்கின்றோம்; தேகாதமாபிமா நிகளான சம்சாரி களைக் கொண்டு போது போக்கவோ? ஈஸ்வரோஹம் என்று இருக்கிற பிரமன் சிவன் முதலாயினோர்களைக் கொண்டு போது போக்கவோ? பகவதருபவத்திலே நோக்காக இருக்கிற நித்திய சூரிகளைக்கொண்டு போது போக்கவோ? இத்தலையை உரி குறைகொண்டு போன 24. திருவாய் 7, 3: 4 25. உரி - புடைவை; குறை கொண்டு - கொள்ளை யடித்துக்கொண்டு.