பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பேரெயில் மகரநெடுங் குழைக்காதன் 199 என்ற பாடல் அரசர் உள்ளம் உருகிய நிலையை உணர்த்துகின்றது. மேலும் சில நாட்கள் ஓடின. ‘இன்றாகும், நாளைக்கு நன்றாகும் என்றிங்கு இருப்பதெல் லால் ஒன்றாகிலும் வழி காண்கிலமே? என்று ஏங்கிய நிலையில் புலவர்கள் பால் பேரன்புடையவரும் தெய்வ பக்தி மிக்கவருமான வடமலையப்பப் பிள்ளையனிடம் தம் நிலையை எடுத்துச் செர்ல்லுவார் யார் என்று எண்ணிய நிலையில் பாடல் ஒன்று உருப்பெறுகின்றது.

வுன்வார் முரசதிள் கோமான் வடமலை யப்பன்முன்னே விள்வாரு மில்லை யினினங்கள்

காரியம் வெண்தயிர்பால் கள்வா! அருட்கடைக் கண்பார்! கருணைக் களிறழைத்த புள்வாகனா: அன்பர் வாழ்வே! தென்திருப் பேரைப் புராதனனே' இதனை மனமுருகிப் பாடுவதைக் கேட்ட சிறைக் காவலர் களில் ஒருவன் ஏதோ குறையால் தன் எசமானன் பெயரை அமைத்துச் செய்யுள் இயற்றி அதைத் திரும்பத் திரும்பப் பாடுவதாகக் கருதி நேரே சென்று பிள்ளை யனிடம் தெரிவித்தான். உடனே அவர் சிறைச்சாலைக்கு வந்து அவர்களைச் சிறை வீடு செய்தார். அது முதல் அவர் நிலங்களுக்கு வரியே இல்லாமல் செய்தார். 65 பாடல்களே நிறைவு பெற்றிருந்த நூலை முடித்தருளுமாறு வேண்டிய பிள்ளையன் விருப்பத்தை நிறைவேற்றினார் தீட்சிதர். நாள்தோறும் ஆழ்வார் திருநகரி சென்று குழைக் காதரையும் நம்மாழ்வாரையும் சேவித்த பின்னரே உணவு கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். திருக்கோயில் அர்ச்சகரும் தீட்சிதர் சற்றுத் தாமதமாக வந்த போதிலும் காத்திருந்து தீர்த்தம் திருத்து ழா ய்