பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. சீவைகுந்தத்துத் தேவன் ஒருவருடைய நல்வினை தீவினையாகிய வினைகளின் தொகுதியை மூனறு வகையாகப் பகுத்துரைப்பர் சமயச் சான்றோர்கள். பிறவிதோறும் செய்து குவிந்து கிடக்கும் வினைத் தொகுதியில் இப்பிறப்பில் அநுபவித்தற்கென்று அளந்துகொள்ளப் பெற்ற வினையின் பகுதியைப் பிராரத்தம் நுகர்விணை) என்று வழங்குவர். இது போக எஞ்சியவினைப் பகுதி சஞ்சிதம் (பழவினை) என்று வழ்ங்கப்பெறும். இந்தப் பிறவியில் ஒருவர் செய்யும் வினைப் பகுதி ஆகாமியம் (எதிர்விணை) என்று கூறப்பெறும். இவற்றுள் பிராரத்தம் அநுபவித்தே ஒழிக் தற்பாலது. பிரபத்தி செய்யும் அனைவருக்கும் எம்பெருமான் இரட்சகனாக அமைந்துவிடுகின்றான்; மோட்சத்தையும் கொடுக்கின்றான். ஆனால் அவர்கள் இந்த உடல் முடியும் வரை (பிராரத்தம் தீரும் வரை) பொறுத்திருத்தல் வேண்டும். இந்தக் கருத்தை நம்மாழ்வார். 'சரணமா கும்தன தாளடைந் தார்க்கெல்லாம் மரணமா னால் வைகுந் தம்கொடுக் கும்பிரான்' என்ற திருவாய்மொழியால் விளக்குவர். தவம் செய்து மனம் தூய்மை அடைந்து, யான்' என்ற அகப்பற்றை பும் எனது என்ற புறப்பற்றையும் போக்கி மெய்யுணர்வு பெற்ற பெரியோர்களைச் சஞ்சித வினை நெருங்காது 1. திருவாய் 9, 10 : 5