பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் அழிந்துபடும். அங்ங்ணம் மெய்யுணர்வு பெற்ற பெரியோர் கள், தெரிந்து தமக்கென எவ்வினைகளையும் செய்யார்கள். எனவே, அவர்களிடம் ஆகாமிய வினை ஒன்றும் சேராது. அவர்கள் அறியாமல் இப் பிறப்பில் அவர்களால் ஏதேனும் வினை நிகழுமாயின் அதற்குப் பலன் இல்லை. ஆகவே, மெய்யுணர்வு பெற்ற பெரியோர்கட்குச் சஞ்சிதம், ஆகாமியம் என்னும் இருவகை வினைப் பகுதிகளும் இலவாகும் என்பது அறியத் தக்கது. அவ்விரு வகை வினைகளையும் இறைவன் தீயினில் தூசாகச் செய்து விடுகின்றான் என்பது சமயமரபாக இருந்து வரும் நம்பிக்கையாகும். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் எழுந்த வண்ணம் தென் திருப்பேரையினின்றும் சீவைகுந்தத்தை நோக்கி விரைவாக வந்து கொண்டிருக்கின்றோம் பரமபதத்திலுள்ள சீவைகுந்தத்திற்குச் செல்லுகின்றது போன்ற எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகின்றோம். இந்த ஊர் நெல்லைக்கு நேர்கிழக்கே பதினேழு கல் தொலைவிலுள்ள ஒரு சிற்றுார்; வட்டத்தின் தலைநகரம். இந்த ஊருக்கு இருபூர்த்தியிலும் சென்று சேரலாம். நெல்லை -திருச்செந்துார் இருப்புப் பாதையில் ரீவைகுண்டம் என்னும் நிலையத்திலிருந்து அரை மைல் தொலைவு நடந்து சென்று இவ்வூரை அடைதல் வேண்டும். இதற்குத் தண்பொருநை யாற்றில் கட்டப் பெற்றுள்ள அணையுடன் சேர்ந்த பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும். நாம் வரும் சிற்றுந்தும், இப் பாலத்தைக் கடந்தே சென்று சேர்கின்றது. வண்டி பாலத்தின் மீது செல்லும்பொழுதே நூற்றுப் பத்தடி உயரமுள்ள கோபுரத்தின் தரிசனம் நமக்குக் கிடைக்கின்றது. இத் திவ்விய தேசம் நவ திருப்பதி யில் ஆறாவது ஆகும். திருக்கோயிலின் வெளி மதிலோரத்தில் நம் வண்டியை நிறுத்திவிட்டுத் திருக் கோயிலில் நுழைகின்றோம். கோயில் சற்றுப் பெரிய கோயிலே; இது 580 அடி நீளமும் 396 அடி அகலமும்