பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவைகுந்தத்துத் தேவன் Ż{}; பாசுரத்தை மிடற்றொலியில் சேவித்து நின்ற திருக்கோலத் தில் சேவை சாதிக்கும் வைகுந்தகாதரை வணங்கு கின்றோம்.

புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை

இருந்துவை குந்தத்துள் கின்று, தெளிந்தனன் சிங்தை அகங்கழி யாதே என்னையாள் வாயெனக் கருளி, களிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப காங்கள் கூத் தாடிகின்று ஆர்ப்ப, பளிங்குநீர் முகிலின் பவளம்போல் களிவாய் சிவப்பநீர் காணவு ராவே'." (அகம் கழியாதே-அங்கு விட்டுப் பிரியாமல்; நளிர்ந்தகுளிர்ந்த, சீர்-திருக்குணம்; முகில்-மேகம்.) என்பது பாசுரம். இங்கும் வைகுந்தத்துள் நின்று' என்ற தொடர்மட்டிலுமே இந்த எம்பெருமானைக் குறிக்கின்றது. இந்த இரண்டு பாசுரங்களாலும் அர்ச் சாவதாரமாக எல்லாத் திருப்பதிகளிலும் எல்லாத் திருக்கோலங்களிலும் எழுந்தருளியிருப்பவன் பரமபத நாதனே என்ற தத்துவம் குறிப்பாகப் புலப்படுத்தியிருப் பதையும் அறிகின்றோம். பொதுவாக அர்ச்சை வடிவில் உள்ள எம்பெருமான் சில தலங்களில் சயனித்திருப்டான், சிலவற்றில் வீற்றிருந்து சேவை சாதிப்பான்; இன்னும் சிலவற்றில் நின்ற திருக் கோலத்தில் காட்சி தருவான். ஆழ்வார்கள் இந்த மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமானைத் தனித்தனியாக அநுபவித்து மகிழ்வர். இத்திருக்கோலங்கள் மூனறையும் ஒரு சேர சேர்த்தும் அவர்கள் அநுபவித்துக் களிப்பர். திருமழிசையாழ்வார், 'ங்'ன்ற தெங்தை ஊரகத்து இருந்ததெந்தை பாடகத்து திெரு9ெ, 2 : 4