பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரகுண மங்கை விசயானசர் 2 : 5 செய்துள்ளார். அதுவும் இந்தப் பாசுரம் நேரே இவரை மங்களாசாசனம் செய்ததன்று. அண்மையிலுள்ள திருப்புளிங்குடி எம்பெருமானை மங்களாசாசனம் செய்த திருவாய்மொழிப் பதிகத்தில் இப்பாசுரம் வரு கின்றது. புளிங்குடி எம்பெருமானை மங்களாசாசனம் செய்து கொண்டிருக்கும் பொழுதே வரகுணமங்கை எம் பெருமானும் வைகுந்தநாதனும் விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்து இவர் பாசுரத்தால் மங்களாசாசனம் பெறு கின்றனர். இப்பொழுது, 'யான்ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலன், தான் ஒட்டி வந்துஎன் தனிகெஞ்சை வஞ்சித்து, ஊன்ஒட்டி கின்றுஎன் உயிரில் கலந்து, இயல் வான்ஒட்டு மோ இனி என்னை நெகிழ்க்கவே?" (ஒட்டி-இசைத்து: என்றிலன் - நினைத்திலேன்; வஞ்சித்து-வசீகரித்து; ஊன்-உடல், இயல்வான்-இப்படி நடக்கிறவன்; நெகிழ்க்க-நீங்க; ஒட்டுமோ-இசைவனோ.) என்ற திருவாய்மொழியை ஓதி உளங்கரைகின்றோம். இந்த நிலையில் திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அவர்களின் திருப்பாசுரமும் நம் நினைவிற்கு வருகின்றது. காலமும் கோயும் கருதாத அன்னைமீர் வேலன் வெறியை விலக்குமின்கள்-மாலாம் வரகுண மங்கையன்றான் வண்துழாய் மேல் ஆ தரகுண மங்கை தனக்கு,’’’ (காலம்-பருவம்; வெறி-வெறியாட்டு, மால் ஆம்-திருமா லாகிய, தாள் - திருவடியில் சாத்திய வள்துழாய் மேல்வளப்பமுள்ள திருத்துழாயின் மீது; ஆதாரகுணம்-ஆசை யாகிய குணம்.) என்பது பாசுரம். இதனையும் ஒதுகின்றோம். கள வொழுக்கத்தால் தலைமகளைக் கூடிய தலைமகன் (எம் 4. திருவாய் 1.7:7 5. நூற். திருப். அந்-55