பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்' என்று கூறிய பெருமான் அல்லவா? சீவைகுண்டத்திலிருந்து 'சிற்றுந்தில்’ வரும் பொழுதே இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் உள்ளன. நம் சிற்றுந்து வரகுணமங்கையை வந்து அடைகின்றது. வரகுண மங்கை என்ற இத் திவ்விய தேசம் சீவைகுண்டத்திற்குக் கிழக்கே தூத்துக்குடி செல்லும் சாலையில் ஒரு கல் தொலைவில் உள்ளது. நவ திருப்பதிகளுள் இஃது ஏழாவது தலமாகும்; தண் பொருநை யாற்றின் வடகரையில் உள்ளது. நம் உந்தினைக் கோயி லருகில் நிறுத்தி விட்டுத் திருக்கோயில் எம்பெருமானைக் காண விரைகின்றோம். திருக்கோயிலில் நுழைந்து கருவறையில் இருந்த திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கிம் விசயாசனரையும் (வெற்றி இருக்கைப் பெருமாள்) வரகுண வல்லித் தாயாரை யும் சேவிக்கின்றோம். நம்மாழ்வாரின்,

  • புளிங்குடிக் கிடத்து வரகுண மங்கை இருக்துவை குந்தத்துள் நின்று, தெளிந்தஎன் சிங்தை அகங்கழி யாதே

என்னையாள் வாயெனக் கருளி, களிர்ந்தசீர் உலகம் மூன்றுடன் வியப்ப காங்கள்கூத் தாடி நின்று ஆர்ப்ப, பளிங்குநீர் முகிலின் பவளம்போல் கனிவாய் சிவப்பநீ காணவா ராயே..' (அகம்கழியாதே-அங்குவிட்டுப் பிரியாமல்; நளிர்ந்த, குளிர்ந்த; சீர்-திருக்குணம்; முகில்-மேகம்) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை மிடற்றொலி கொண்டு ஓதி உளங்கரைகின்றோம். இத்தலத்து எம்பெருமானை நம்மாழ்வார் மட்டிலும் மேற்குறிப்பிட்ட ஒரே ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் 2. திருவாய் 6.7:1 8. ഒു. 9,2:4