பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் தாலும் நாம் நாம் காணும்; இங்கே எழுந்தருளிர்” என்று அருளிச் செய்தாராம். அடுத்த பாசுரத்தில் வீற்றிடங்கொண்டு வியன் கொள் மாஞாலத்து இதனுளும் இருந்திடாய் என்று வேண்டுவர். எம்பெருமானுடைய பரம சுகுமாரமான திருமேனிக்கு இந்த முரட்டு நிலம் சிறிதும் தகாது; ஆயினும் அடியார்கள் சேவிப்பதற்காகவே இங்கு அவன் எழுந்தருள வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்ற தத்துவத்தை வெளியிட்டுக் கொண்டு வேண்டுகின்றார் ஆழ்வார். இருந்திடாய்: கிடந்த திருக்கோலத்தின் அழகு கண்டோம்; இருந்த திருக்கோலத் தின் எழிலைக் காண வேண்டாவோ? அதையும் காட்டி யரு ளாய் என்பது பொருள். இங்கே பட்டர் அருளிச் செய்தது: இவையெல்லாம் நமக்குக் கோயிலிலே காணலாமிறே; சாய்ந்தருளின் அழகு பெரிய பெருமாள் பக்கலிலே; நின்றருளின அழகு நம் பெருமாள் பக்கலிலே; இருப்பில் அழகு பெரிய பிராட்டியார் பக்கலிலே’ என்று. அடுத்து, ஆழ்வாரின் வேண்டுகோள் தான் எம் பெருமானின் திருவடியை வருட வேண்டும் என்பது. வடிவினை யில்லா மலர்மகள் மற்றை கிலமகள் பிடிக்கும்மெல் அடியை கொடுவினை யேனும் பிடிக்ககீ ஒருநாள் கூவுதல் வருதல்செய் யாயே.” |வடிவு-வடிவழகு; இணை-ஒப்பு: மலர்மகள்-பெரிய பிராட்டியார்; கூவுதல்-அழைத்துக் கொள்ளல்; வருதல்தானே வருதல்.1 என்ற பாசுரப் பகுதியில் ஆழ்வாரின் விடாயைக் காண லாம். வடிவழகுக்கு ஒப்பில்லாத பிராட்டிமார் தங்க ளுடைய பரம சுகுமாரமான திருக்கைகளாலே பிடிக்கும் போதும் கன் றிவிடுமோ ஒன்று கூசிப் பிடிக்கும்படி 14. திருவாய் 9. 2; 10.