பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் நியம நிட்டைகளுடன் சரணம்புக்கான். வீடணன் நின்ற நிலையிலேயே சரணம் புக்கான். ஆகவே, தகுதியில்லாத வனுக்குத்தகுதியையும், தகுதியுள்ளவனுக்குத் தகுதியின்மை யையும் தேடவேண்டாம் என்றும், அவரவர் நின்ற நிலை களிலேயேசரணம் புகலாம் என்று விளக்கினார் நம்பிள்ளை. பாண்டவர்களும், திரெளபதியும், காகமும், காளி யனும், கஜேந்திராழ்வானும், வீடணனும், பெருமாளும், இளைய பெருமாளும் சரணம் புகுகையில் அதிகாரி நியமும் இல்லை என்பதனையும் சிந்திக்கின்றோம். இந்த இடத்தில் சுவாமி தேசிகனின் வாக்கும் நம் நினைவிற்கு வருகின்றது. "எல்லார்க்கும் எளிதான ஏற்றத் தாலும் இனியுரைக்க மிகையான இரக்கத் தாலும் சொல்லார்க்கும் அளவாலும் அமைத லாலும் துணிவரிதாய்த் துனைதுறக்கும் சுகரத் தாலும் கல்லார்க்கும் கற்றோர்சொல் கவர்த லாலும் கண்ணனுரை முடிசூடி முடித்த லாலும் நல்லார்க்கும் தீயார்க்கும் இதுவே கன்றாம் நாரணற்கே அடைக்கலமாய் கணுகுவீரே.??? (ஏற்றம்-பெருமை; மிகை-அதிகம்; இரக்கம்-கருணை; சொல்-பிரபத்தி வாக்கியம்; துணிவு- பிரபத்தியின் அங்கம், ககரம்-செளகர்யம்; கவர்தல்-பலனைக் கொண்டிருத்தல்; கண்ணன் உரை-கீதை; முடித்தல்-தலைக்கட்டுதல்) என்பது அந்தச் சுவாமிகளின் திருவாக்கு. இதனையும் நன்கு சிந்திக்கின்றோம். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் தொலைவிலி மங்கலத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றோம். தொலைவிலி மங்கலத்தை இரட்டைத் திருப்பதி என்றும் வழங்குவர். அடுத்தடுத்து இரண்டு-கோயில்கள் இருப்பதால் இஃது இங்ங்னம் 5. தே. பி. 200