பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானமாமலைத் தோத்தாத்திரிநாதன்- 269 பெருமையை குறுமுனியாகிய அகத்தியரே அவருடைய மருத்துவ முறையில் குறிப்பிட்டுள்ளார். சில வரலாற்றுச் செய்திகளையும் இங்கு அறிகின்றோம். பாண்டிய மன்னன் ஒருவன் வானவன மாதேவி என்ற சேரகுலமங்கையை மணந்து வானவன் என்ற பட்டத்தைப் பெற்றான் என்றும், அந்த மன்னன் இத்திருக்கோயிலை எடுப்பித்ததால் இத்தலம் வானமாமலை" என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். வரமங்கை நாச்சியார் கோயில் கொண்டிருப்பதன் காரணமாக வரமங்கல நாயகர் என்ற பெயர் பெற்றுள்ளது. அந்தப் பெயரையே ஆழ்வாரும் தம் பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார். பாண்டியர்களால் நிறுவப் பெற்ற இத்திருக்கோயில் நாயக்கர் மன்னர்களால் விரிவடைந்திருக்கின்றது. இன்றும் சுற்றுத் துண்கள் தாங்கும் நீண்ட பிராகாரங்கள் இத் திருக்கோயிலின் பெரும் பகுதி நாயக்க மன்னர்களின் திருப்பணியே என்பதற்குச் சான்று பகர்கின்றன. புஷ்பாஞ்சலி சந்நியாசி என்ற மகான் ஒருவரும் பல திருப்பணிகளைச் செய் வித்தார் என்பதும் செவிவழிச் செய்தி. இங்ங்னம் பல செய்திகளை அறிந்தவண்ணம் மன நிறைவுடன் திருக்குறுங்குடி’ என்ற திவ்விய தேசத்திற்குப் புறப்படச் சித்தமாகின்றோம். மீணடும் ஒரு முறை இத் திருத்தலம்பற்றிய திருவாய்மொழியை ஓதி உளங்கரை கின்றோம்.இத் திருவாய்மொழியை நாடோறும் ஒதவல்லார் வானோர்க்குத் தெவிட்டாத அமுதத்தைப் போன்றவராவர் என்ற பலனையும் சிந்தித்த வண்ணம் பேருந்து நிலையத் திற்கு வருகின்றோம்.