பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்புரைகள் 1. மலைநாட்டுத் திருப்பதிகள் (2-ஆம் பதிப்பு-1988) ரூ. 18 : 00 மெய்ப் பொருளோடு ஊடாடுவதற்கென்று ஒவ்வொரு சமயத்திலும் பல உக்திகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் வைணவ ஞானிகள் வகுத்து வைத்திருக்கும் உக்திகள் தனிச்சிறப்புடையவை. இறைவனோடு ஊடாடித் திளைப்பதற்கு இங்ங்னம் வழி செய்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவ்வழியிலே நம்மை நடத்திச் செல்கிறது இந்நூல்... ஆசிரியரின் பிடிக்குள் அடங்காத படிப்பு பக்தி என்கின்ற சூரிய காந்தக் கல்லில் புகுந்து ஒருமையும் பயனும் பெற்று விட்டது. வாழ்க மலைநாட்டுத் திருப்பதிகள்!’ -ஜஸ்டிஸ் எஸ். மகராசன் (அணிந்துரையில்) 'உண்மையில் பக்தர்கட்கு இந்நூல் நல்விருந்து. ஜஸ்டிஸின் அணிந்துரை மிகப் பொருத்தமாக அமைந் துள்ளது. திருக்கோயில் பத்திரிகை தொடக்கமான காலத்தில் மலைநாட்டுத் திருப்பதியநுபவம்” என்ற என் கட்டுரை இரண்டாண்டளவும் எழுதித் தந்தேன்... அதனிற் சிறந்த அநுபவம் நுமது என்று அறுதியிட்டேன். அடிக்கடி எடுத்து வாசிக்கத் தூண்டும் நூலிது’’ -காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் Dr. N. Subbu Reddiar here takes us through 13 holy shrines out of 108 situated all over India, located in the Kerala state near Nagerkoil...The author has not only given an elaborate account of their location, the legend, vivid description of the architectural splendour of the