பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் என்று நம்மாழ்வார் கூறுவதுபோல் பூமியில் அவதாரம் செய்து பல இடங்களில் சஞ்சரித்தாலும் அவன் அக்காலத் தில் இருந்தவர்கட்குமட்டுமே அடையத்தக்கவனாக இருந்து பின்னானாருக்குக் கிட்டாத நிலையிலிருப்பவன் விபவ நிலை எம்பெருமான்.

செளலப்பியத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்' என்று முமுட்சுப்படி குறிப்பிடுவதுபோல் எல்லோரும் கிட்டுவதற்கு எளிதாயிருக்கும் இருப்பே எம்பெருமானின் அர்ச்சாவதார நிலை. இங்கு, கண்ணுக்குப் பொருளாக இருக்கும் எம்பெருமான் எல்லோரும் தம் ஊனக் கண்களாலே கண்டு பற்றுவதற்கேற்ப எளியனாயிருக் கின்றான். 'தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே?" என்று பொய்கையாழ்வார் அருளிச் செய்திருப்பதும் எம்பெருமானின் இந்நிலையையே. இந்நிலை எம்பெருமான் கண்டு பற்றவேண்டும் என்று ஆசைப்படும் நம் மனோர்க் குக் காண்பதற்குத் தேசத்தாலும் காலத்தாலும் கரணத் தாலும் சேயதன்றிக்கே, திருக்கோயில்களிலும் திரு. மாளிகைகளிலும் என்றும் தக்க நம் கண்ணுக்கு இலக்காம் படி பின்னானார் வணங்கும் சோதியாக' எழுந்தருளி யிருப்பதால் இந்நிலைகளை நினைந்து இந்நிலை எம்பெரு மானை மடுக்கள் போலே’ என்று பன்மையால் அருளிச் செயப்பெற்றுள்ளது. அவதாரங்களின் குணங்கள் எல்லாம். அர்ச்சையினிடத்தில் குறைவற்று நிறைந்திருக்கையாலும் அவதாரங்களின் திருமேனிகளை அர்ச்சைவடிவமாகப் பல இடங்களில் எழுந்தருளச் செய்யப்பெற்றிருப்பதாலும் "அதிலே தேங்கின மடுக்கள் போலே’ என்று கூறப் பெற்றுள்ளமை எண்ணி உணரத்தக்கது.

இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் எழுந்த வண்ணம் காரைக்குடியிலிருந்து திருமெய்யத்திற்குப் போகச் சித்த --سمبر 4. திருவாய் 6, 9 : 5 5. முமுட்சுப்படி-139 6. முதல் திருவந். 44 7. திருநெடுந் 10