பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமெய்யத்து இன்னமுதம் 23 மாகின்றோம். புதுக்கோட்டை என்ற பெயர்ப்பலகை தாங்கியுள்ள பேருந்தில் ஏறுகின்றோம். பேருந்தில் வருங்கால், 'உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையோர்க் குய்ய லாமே?' |நத்தும் - துதிக்கும், மண்டினார் - மூழ்கினார்; உய்யலாமே -உய்யவழி உண்டோர் என்ற திருமங்கையாழ்வாரின் திருக்குறுந்தாண்டகப் பாசுரப்பகுதி நம் சிந்தையில் எழுகின்றது, எம்பெருமான் உகந்த ருளின் திவ்விய தேசங்களிலெங்கும் பதியே பரவித் தொழும் தொண்டர்’ என்னும்படியாக மூழ்கியிருப்பவர்கள் உய்ய வழி உண்டேயல்லது அப்படித் தொழாதவர்கட்கு ஒரு நாளும் உய்ய வழி இல்லை என்ற ஆழ்வார் கருத்தினை எண்ணியவண்ணம் திருமெய்யத்தை தோக்கி வந்து கொண்டிருக்கின்றோம். திருமெய்யம் திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கில் 45 கல் தொலைவிலும் புதுக்கோட்டைக்குத் தெற்கே பதின் மூன்று கல் தொலைவிலும் உள்ளது. இஃது ஒரு வட்டத்தின் (தாலுகா) தலைநகர், திருமெய்யம் இன்று திருமயம் என்று வழங்கி வருகின்றது. திருமெய்யம்’ என்ற சொல் திருமய்யம்' எனத் திரிந்து திருமயம் என்று குறுகியதுபோலும். திருச்சியிலிருந்து பேருந்து மூலம் வருகின்றவர்கள் புதுக்கோட்டிை வழியாக வரவேண்டும்; இப்படி வருகின்றவர்கள் இருப்பூர்தியில்வரின் திருச்சி-மானாமதுரை இருப்பூர்திப் பாதையில் 8. திருக்குறுந்-19