பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宠姓 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் "திருமயம் என்ற நிலையத்தில் இறங்கி இவ்வூரை அடைய வேண்டும். இவர்கள் நிலையத்தில் இறங்கி நான்கு பர்லாங்கு குளக்கரை வழியாக நடந்தால் ஊர் வந்து சேரலாம். நாம் ஏறிவரும் பேருந்து ஒரு மணி நேரந்தில் திருமெய்யம் பேருந்து நிலையத்தை அடை கின்றது. சிறிது தூரம் நடந்து ஊருக்குள் றுழைந்ததும் நம் கண்முன் தட்டுப்படுவது ஒரு சிறிய குன்றும் அதன் மீது உள்ள கோட்டையுமே. இந்தக்கோட்டை யை ஊமையன் கோட்டை” என்று வழங்குகின்றனர். முற்காலத்தில் ஊரைச்சுற்றிலும் ஒரு கோட்டை இருந் திருக்கவேண்டும். திருச்சியிலிருந்து வருங்கால ஊர்ப் பக்கத்திலுள்ள இடிந்த கோட்டைச் சுவரும் ஏனையச் சின்னங்களும் இதனை உறுதிசெய்யும். பாஞ்சாலங் குறிச்சி வீரர்களான கட்டபொம்மனும் ஊமைத்துரை யும் தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும் என்று ஊகம் செய்கின்றோம். குன்றின்மீது ஏறுவது மிகவும் எளிது. மலையின் மீதுள்ள கோட்டை வாயில் எப்பொழுதும் பூட்டியே வைக்கப்பெற்றிருக்கும் என்பதை ஊர் மக்கள் சொல்லக் கேட்கின்றோம். ஆகவே, அங்குள்ள காவற்காரனைத் தேடிப்பிடித்துக் கதவைத் திறக்கச் சொல்லி மலையில் ஏறுகின்றோம். அங்குள்ள மேட்டில் பழையகால பீரங்கி ஒன்று வைக்கப் பெற்றிருப்பதைக் காண்கின் றோம். அதன் பக்கத்தில் ஏறி நின்று ஊரைச் சுற்றி நாற்புறமும் உள்ள காட்சிகளைக் கண்டு களிக்கின்றோம். வடபுறத்திலுள்ள ஏரி குளம் பச்சைப்பட்டு விரித்தாற் போன்ற நெல்வயல் இவை மனத்திற்குக் குளிர்ச்சியை நல்குகின்றன. இவற்றைத் தவிர மலைக்கோட்டையில் பார்க்கவேண்டியவை ஒன்றும் இல்லை. மலையினின்றும் இறங்கி ஊரைச் சுற்றிக் கொண்டு திருக்கோயிலுக்கு வருகின்றோம். பெருமாள் கோவில்"