பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாண்டிநாட்டுத் திருப்பதிகள் எனத் திருவாய் மலர்ந்துள்ளமை ஈண்டு நோக்கத் தக்கது. இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் திருப்புல்லாணி என்ற திவ்விய தேசத்தை நோக்கிப் புறப்படுகின்றோம் காரைக்குடியிலிருந்து. "புல்லணை’ என்ற பெயர் புல்லாணி என மருவிற்று. இராமாயணக் கதை நமக்குத் தெரியும். சீதாப் பிராட்டி யாரைக் கவர்ந்து சென்ற இராவணனைப் கொல்லுதற் பொருட்டு இராமபிரான் வானரப்படையுடன் தெற்குக் கடற்கரையை அடைகின்றான். வீடணன் யோசனைப்படி வருணனை வேண்டினால் அவன் கடல் கடக்க வழியமைத்துத் தருவான் எனக் கருதி அவனை வழிபட முனைகின்றான். அதற்காகத் தருப்பையைச் சயனமாக்கி அதிலமர்ந்த வண்ணம் ஏழு நாளளவும் த்வக்கோலத்தி லிருக்கின்றான். இராமபிரான் தருப்பையில் கிடந்த தலமாதலால் இது வடமொழியில் தருப்ப சயனம்’ என வழங்கலாயிற்று, புல்லணை’ என்பது அதற்கு ஏற்ற தமிழ்ப் பெயர். இந்த வரலாற்றைக் கம்பநாடனின், - “தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருகஎன்னும் பொருள் நயந்துகல் நூல்நெறி அடுக்கிய புல்லில் கருணை அம்கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி வருண மக்திரம் எண்ணினன் விதிமுறை வணங்கி." (தருண மங்கை-இளம் பருவத்தையுடைய சீதை, புல்-தருப்பை, கருணை அம்கடல்-இராபிரான்.) என்ற பாடலால் அறிகின்றோம். திருப்புல்லாணி இராமநாதபுரத்துக்குத் தெற்கே. கீழக்கரை என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் ஏழு கல் தொலைவிலுள்ள ஒரு சிறிய ஊர். திருச்சி-இராமேசுவரம் 5. திருவாய் 1, 2 : 10, 6. யுத்த. வருணனைவழி-6.