பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புல்லாணி எம்பெருமான் 39 இருப்பூர்திப்பாதையில் இராமநாதபுரம் என்ற நிலையத் தில் இறங்கி இந்த ஊருக்குச் செல்லவேண்டும். இராமநாத புரத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. கடற்கரையைச் சார்ந்த சிற்றுாராதலின் மணற்குன்றுகள் எம்மருங்கும் மலிந்து காணப்படுகின்றன. என்றாலும், திருக்கோயில் வாயில் செல்லும் வரை நல்ல சாலை வசதியுண்டு. இந்த திவ்விய தேசத்தில் இலங்கைக்குச் செல்ல சேது கட்டத் தீர்மானம் ஆனதால் இத்தலம் ஆதி சேது என்றும் வழங்கப்பெறுகின்றது. இன்றும் இத்தீர்த்தத்துறையில் மூழ்குவோர்ஸ்ேது மூலே புல்லாரண்ய கூேடித்திரே என்று சங்கல்பம் செய்து கொள்ளும் வழக்கு உண்மையாலும் இஃது உறுதிப்படுகின்றது. மேலும், இன்றும் கன்யாகுமரி ஆதிசேதுவாகவும்’, தனுஷ்கோடி மத்திய சேதுவாகவும், சோணாட்டுக் கோடிக்கரை அந்த சேதுவாகவும் மக்களால் கருதப்பெறுவதை நாம் கேட்டறியலாம். எய்த யோசனை ஈண்டொது நூறுஇவை அய்யி ரண்டின் அகலம் அடைந்திடச் செய்த தால் அணை என்றிது செப்பினார் வைய நாதன் சரணம் வணங்கியே.”* என்ற கம்பநாடனின் திருவாக்கின்படி நூறு யோசனை நீளமும், பத்து யோசனை அகலமும் உடையதாக இராமசேது அமைக்கப்பட்டதாகத் தெரிவதால், குமரிதனுஷ்கோடி எண்பது மைல் அகலமுள்ள சேதுவால் இணைக்கப்பெற்று ஏறக்குறைய ஒன்றாக இருந்ததென்று 7 இராமசேதுவைக் கன்னியாகுமரியதாகக் கூறும் வழக்கும் உண்டு. இன்றும் குமரித்துறையில் நீராடுவோர் :ஆதியேதோ: கன்னியாகுமரி, கூேத்தர மாதுர் பிதுர் தீர்த்தே' என்று சங்கல்பம் செய்துகொள்ளும் வழக்கு உண்டு. கன்னியாகுமரித் தலபுராணமும் இதனையே கூறு கின்றது. 8. யுத்த சேது பந்தனர்-71