பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் கொள்ளினும் அமையும். பலவெள்ளங் கொண்ட வானரசேனை சென்ற வழி இவ்வளவு அகலமுடையதாக இருந்திருக்க வேண்டுமன்றோ? நாம் ஏறி வரும் இராமேசுவரம் விரைவு வண்டி இராமநாதபுரத்தை அடைந்ததும் நம் மனம் புல்லாணி திவ்விய தேசத்தில் மெல்ல ஆழங்கால்படத் தொடங்கு கின்றது. திருப்புல்லாணி எம்பெருமானைத் திருமங்கை யாழ்வார் மட்டிலுமே மங்களாசாசனம் செய்துள்ளார். ஆழ்வார் பாசுரங்கள் நம் சிந்தையில் எழுகின்றன. சோழ நாட்டுத் திருப்பதிகளின் அநுபவம் ஆழ்வார்க்கு திரு நாகைப்பதியுடன் தலைக்கட்டிவிட்டது: திருநாகையிலுள்ள அழகியாரை அநுபவித்த நாயகி பாவனையுடன் திருப் புல்லாணி எம்பெருமானையும் அநுபவிக்கத் தொடங்கு கின்றார். பிரிந்தவர்கள் இரங்குவது கடற்கரையில்? என்பது அகத்திணை மரபு. திருப்புல்லாணி என்ற திவ்விய தேசம் கடற்கரையில் அமைந்ததாதலால் ஆழ்வாரின் இரண்டு திருமொழிகளும் நாயகனைப் பிரிந்து வருந்தும் நாயகியின் பாசுரங்களாகச் செல்லுகின்றன. திருமங்கையாழ்வார் காலத்துத் திருப்புல்லாணியைப் பாசுரங்களில் காண்கின்றோம். அற்புதமான நெய்தல் நிலக் காட்சிகளைப் பாசுரங்களின் மூலமாகக் கண்டு அநுபவிக்கின்றோம். இராமேசுவரத்தில் கடல் அமைதியாக இருப்பதுபோல் திருப்புல்லாணிக் கடல் அமைதியாக இல்லை; அங்கு அது மிகக் கொந்தளிப்புடன் உள்ளது. அச்சத்தை விளைவிக்கக்கூடிய பேரலைகளை அங்குக் காண்கின்ற்ோம். திருமங்கையாழ்வாரும், "பொருது முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணி' 9. பெரி திரு 9. 3 : 9 - 4. 10. பெரி திரு 9. 3 : 2