பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் |ஏசுதல்-பழித்தல்; பேசுதல்-கண்டித்துச் சொல்லுதல்.) என்பது அவளது மனவுறுதியைக் காட்டுகின்றது. ‘எம்பெருமானைத் தவிர மற்றவர்கள் மெய்யே சொல்லி ணும் அதனால் நமக்குப் பயன் இல்லை. எம்பெரு மானது உரை பொய்யேயாயினும் அது தவிர வேறொன்று நமக்குப் புகல் இல்லை’ என்கின்றாள் இவ்விடத்தில் பட்டர் சுவையாக அருளிய இராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யுமே நமக்குத் தஞ்சம்' என்ற திருவாக்கு எண்ணி எண்ணி மகிழத்தக்கது. அடுத்து, கண்ணனின் ஒரு வீரச்செயலை நினைந்துப் பேசுகின்றாள். 'குவலயாபீடம் போன்ற அசுரர்களை வேரோடு தொலைத்துத் தன் திருமேனியை அன்பர்கட்குக் காட்டி அவர்களைப் பூர்ணாநுபவம் பெறச் செய்த எம்பெருமான் நம் திறத்தில் அருள் செய்த அழகு என்னே!’ என்கின்றாள்.’’ எல்லோர்க்கும் தண்ணென் றிருக்கும் இளம் பிறை தனக்கு மட்டிலும் நெருப்புக் கதுவினாற்போலிருக்கும் நிலையை எண்ணி வருந்து கின்றாள். 'தேம்பல் இளம்பிறையும் என் தனக்கோர் வெம்தழலே.”* (தேம்பல்-மிக்க; தழல்-நெருப்பு.) என்று ஆழ்வார் நாயகி சொல்லி வருந்துவதைக் காண்க. தான் உறக்கமின்றி வருந்துவதை, 'ஒதமும் நானும் உறங்கா திருந்தேனே.”* (ஒதம்-கடல்) என்ற வரியில் வெளியிடுகின்றாள். ஒதவண்ணன் தனக்குப் பிரதிநிதியாக ஓதத்தை ஆளாக்கி வைத்தான் போலும் என்பது ஆழ்வார் நாயகியின் குறிப்பு. 42. பெரி திரு 9.4:8 44. ഒു 9.4:9 43, 6ു. 9, 4:8