பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புல்லானி எம்பெருமான் 3 இங்கனம் ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால் பட்ட வண்ணம் இருக்கும் நம்மைப் பேருந்து திருக்கோயிலின் வாயில் அருகில் இறக்குகின்றது. எம்பெருமானைச் சேவிக்கும் எண்ணம் உந்த திருக்கோயிலுள் புகுகின் றோம். பிராகாரத்தில் வந்து கொண்டிருக்கும்பொழுதே இராமபிரான் புல்லணை மீது தவக்கோலத்துடன் சேவை சாதிப்பதைக் காண்கின்றோம். அவனை வணங்கி அவ னருள் பெற்று வருங்கால் பட்டாபிராமன் சந்நிதியைக் கண்ணுறுகின்றோம். அப்பெருமானைச் சேவித்துக் கருவறைக்கு விரைகின்றோம். அங்கே வீற்றிருக்கும் ருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலங்கொண்டு சேவை சாதிக்கின்றார் க. பான ஜகந்நாதன். இவரைத் தான் திருமங்கையாழ்வார் வேதமும் வேத வேள்வியும் விண்ணும் இருசுடரும் ஆதியும் ஆனான்' என்று மங்கள சாசனம் செய்துள்ளார். தாயாரின் திருநாமம் . وجمع ர், ஆதித்தாய் தந்தையர்களாகிய r :வி காச்சி, இருவரையும் உளம் உருகச் சேவிக்கின்றோம். திருமங்கை யாழ்வாரின் இரண்டு திருமொழிகளையும் மிடற்றொலியாக ஓதி உளங்கரைகின்றோம். 'கல:கல் இல்லாப்புகழான் கலியன் ஒலிமாலை வலங்கொள் தொண்டர்க் கிடமாவது பாடுஇல் வைகுந்தமே.”* (கலங்கல்-கலக்கம்; கலியன் - திருமங்கையாழ்வார், பாடு-துன்பம்} என்றும்,

  • மன்னவராய் மண் ஆண்டு

வான்காடும் உன்னுவரே' [மண்-பூமி, வான் நாடு - பரமபதம்; உன்னுவர்விரைந்தெழுவர்.) என்னும் ஆழ்வார் கூறும் பலன் நமக்குத் தலைகாட்டியது போன்ற உணர்ச்சியுள் மூழ்கி நிற்கின்றோம். 45. பெரி திரு. 9.4:9 47. டிை 9.4:10 46. ഒു 9.8:10 தி-4