பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் மகள் சித்திராங்கதை அர்ச்சுனனை மணந்து கொண்ட கதை வடநாட்டுடன் தென்னாட்டைத் தொடர்புறுத்தி தேசிய ஒருமைப்பாட்டின் சிறப்பினை விளக்குவதாக அமைந்துள்ளது. அது மட்டுமா? கிரேக்க நாட்டுடனும் உரோமாபுரி ஏகாதிபத்தியத்துடனும் வாணிக உறவு கொண்டு, - 'யாதும் ஊரே யாவரும் கேளிர்!' என்பது போன்ற உயர்ந்த குறிக்கோள்கட்கு ஒருவளர்ப்புப் பண்ணையாகவும் திகழ்ந்தது பாண்டியராட்சி. ஜாவா, சுமத்ரா, கடாரம் முதலிய வெளிநாடுகளுடன் வாணிகத் தொடர்பும் கலைத் தொடர்பும் தமிழகம் பெறுவதற்கு மதுரை மன்னர்களும் பெருமுயற்சியினை மேற்கொண் டிருத்தல் வேண்டும். மதுரைமா நகரம் பாண்டியராட்சியில் உலகப் புகழ் பெற்று அடைந்திருந்த அரசியல் சிறப்பு, வாணிகச் சிறப்பு, கல்விச் சிறப்பு, கலைச்சிறப்பு ஊரமைப்புத் திறம் முதலிய செய்திகளை சிலப்பதிகாரம’ என்ற செந்தமிழ்க் காவியத்தால் அறியலாம். வரலாற்றுப் புகழும், காவியப் புகழும், புராணப்புகழும், பிரபந்தப் புகழும் ஒருங்கே திகழப் பெற்ற மதுரை பெரியாழ்வாரின் பாமாலை ஒன்றும் குடிப்பெருமிதம் பெற்றிருப்பதை அறி கின்றோம். பெரியாழ்வார் காலத்துப் (8-ஆம் நூற்றாண்டு) பாண்டிய அரசனை ரீவல்லபதேவன் என்று வைணவ ஆசாரியார்கள் குறிப்பிட்டுள்ளதை அறிகின்றோம். இந்த அரசனை கோநெடுமாறன்’ என்று குறிப்பிடுவர் பெரியாழ்வார். இந்தப் பாண்டியனைப் பராந்தகன்நெடுஞ்சடையனின் தந்தையாகிய மாறவர்மன் என்று கருதுவர் பேராசிரியர் மு. இராகவய்யங்கார் அவர்கள்.” இவன் காலத்தில்தான் மதுரைக்குப் பெரியாழ்வாரின் 1. புறம்-192. 2. பெரியாழ் திரு-4.2:7 8. சாஸனத் தமிழ்க் கவிசரிதம்.