பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கூடலழகர் 57 சிறப்பாக நடைபெற்று வந்தது. அவன் பல இரவு களில் மாறுவேடம் பூண்டு நகர் சோதனைகளில் குடி மக்களின் சுகதுக்கங்களின் தேவைகளையும் நேரில் அறிந்து கொள்வதில் அக்கறையுள்ளவனாக இருந் தான். ஓரிரவு அவன் ஒரு தெருத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவனை எழுப்பி, தாங்கள் யார்? இருப்பிடம் எது? இங்கு வந்த நோக்கம் யாது?’’ என்று வினவினான். அதற்கு அந்த யாத்திரிகன் தான் கங்கை நீராடி வருவதாகவும், நீ வல்லபர் ஆட்சியில் மதுரை அடைந்திருக்கும் சிறப்பையும் அழகையும் பார்த்துவிட்டு சேது தரிசனம் செய்யப்போவதாகவும் மறுமொழி பகர்ந்தான். நிலவொளியில் திருத்தலப் பயணி யின் முகப்பொலிவைக் கண்ணுற்ற மன்னன் அதனால் கவரப்பெற்று, பெரியீர், வாழ்க்கைப் பயணத்திற்கு வழி கண்டிருப்பின் தாங்கள் அதனை அடியேனுக்கும் காட்ட வேண்டும்’ என்று வேண்டினான். அந்தப் பயணி மறுமொழியாக வடமொழி சுலோகம் ஒன்றினைக் கூறினான். அதன் பொருள்: 'மழைக்காலத்தில் வேண்டியவற்றுக்காக மற்ற எட்டு மாதங்களில் முயற்சி செய்யவேண்டியது; இரவுக் காலத்தின் தேவைக்காக பகலில் முயற்சி செய்ய வேண்டியது; முதுமையில் வேண்டியவற்றிற்காக இள மையில் முயற்சி செய்யவேண்டியது; இங்ங்னமே, மறுமைக்கு வேண்டியவற்றை இம்மையிலே முயன்று பெற வேண்டியது' என்பதாகும். மறுநாள் அரசன் அத்தாணி மண்டபத்திற்கு வந்தான். அவன் முகத்தில் பொலிவு காணப்பெறவில்லை; கவலை படர்ந்திருந்தது. அப்போது அவண் போந்த அரச புரோகிதரான செல்வ நம்பி அரசனின் குறைக்குக் காரணம் வினவினார் அரசன் முதல் நாள் இரவில் நடந்ததை அறிவித்தான். இருவரும் கலந்து வாழ்க்கையின் நால்வகைப் பொருள்களையும் (புருஷார்த்தங்கள்) அளிக்க