பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் இருக்கும் தளத்திற்கு மேலுள்ள தளத்தில் (Second Fia.or) நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பவரே சூரிய காராயணம் என்பவர். இவரைச் சுற்றிலும் தவக் கிரகச் சித்திரங்கள் வரையப்பெற்றுள்ளன. இந்த மூன்று எம்பெருமான்களும் கிழக்கு நோக்கியே திருமுக மண்ட லம் கொண்டுள்ளனர். இவர்கள் மூவரையும் சேவித்து விட்டுத் தாயார் சந்நிதிக்கு வருகின்றோம். தாயாரின் திருநாமம் மதுரை வல்லி காச்சிபார் என்பது. இவர் வகுளவல்லி நாச்சியார், மரகதவல்லி நாச்சியார், வர குணவல்லி நாச்சியார் என்ற திருநாமங்களாலும் வழங்கப்பெறுகின்றார். இவரைச் சேவித்து இவர் அருளைப் பெற்றுக் கொண்டு பிராகாரத்தில் வலமாகச் சுற்றி வந்து ஆண்டாள் சந்நிதியை அடைகின்றோம். அவரையும் சேவித்துக் கொண்டு கோயில் முகப்பினை அடைந்து ஒரிடத்தில் அமர்ந்து இத்திருக்கோயில்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளில் நம் சிந்தனையை ஓட விடுகின்றோம். பழுதடைந்த இத்திருக்கோயில் செட்டி நாட்டுத் தன வணிகர் ஒருவரால் நல்ல திருப் :ணி செய்யப் பெற்றுள்ளது. இந்தத் திவ்விய தேசத்து எம்பெருமானைத் திருமங்கை மன்னன் மட்டிலும், 'கோழியும் கூடலும்”* என்ற ஒரே சொற்றொடரால் மங்களாசாஸனம் செய் துள்ளார். இங்குக் கூ டல்’ என்பது இந்தத் திவ்விய தேசம் கோழி என்பது உறையூரிலுள்ள திவ்விய தேசம். சோழ நாட்டைச் சார்ந்தது. அந்த எம்பெரு மான் பெற்ற மங்களாசாஸனமும் இவ்வளவே. மதுரைமாநகர் பெரியாழ்வாரின் பாமாலை பெற்ற தாக மேலே குறிப்பிட்டேன் அல்லவா? அந்தப் பாமாலைதான் திருப்பல்லாண்டு என்ற பிரபந்தம். அஃது கூடலகர் விஷயமாக ஏற்பட்டதாகப் பெரியோர் பணிப்பர். இதுதான் வரலாறு: ரீவல்லபனின் ஆட்சி 4. பெரி. திரு. 9-3:5