பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கூடலழகர் 53. சுமிருதி, இதிகாசங்களின் துணையாலும் தமது யுக்தியாலும் கண்டித்து தமதுகொள்கை இன்னதென அறுதியிட்டு உணர்த்தினார். காரணமில்லாத காரியமே இல்லை என்று தருக்க முறையில் நிலைநாட்டி இவ்வுலகின் காரணப்பொருளே கடவுள் என்று அறுதியிட்டார். எந்த ஒரு பொருளால் எல்லாப் பொருள்களும் உண்டாகின்றனவோ, எந்தப் பொருளால் எல்லாப் பொருள்களும் நிலைபெறுகின்ற னவோ, எல்லாப் பொருள்களும் இறுதியில் எந்தப் பொருளுடன் சேர்ந்து விடுகின்றனவோ, அந்தப் பரம் பொருளே கடவுள்' என்றார். அந்தப் பரம்போருளே நாராயணன் என்றும், அவனைச் சரணமடைவதே வீடு பேறு அடையும் வழி என்றும் விரிவாக விளக்கினார். எல்லாச் சமயவாதிகளும் வாய் திறக்க வழியின்றி நாணித் தலை கவிழ்ந்தனர். கம்பத்தின் உச்சியில் கட்டப்பெற்றிருத்த பொற்கிழியும் ஆழ்வார் முன்ன தாகத் தானாக இழிந்தது. அதனைக் கண்ணுற்ற அரசனும் துண்ணென எழுந்து ஒடி அக்கிழியை அ றுத்துக் கொண்டு வந்து விஷ்ணு சித்தர் அடிகளில் வைத்து வணங்கினான். விஷ்ணுசித்தரும் அரசனை விரைந் தெடுத்து ஆசி கூறினார். விஷ்ணுசித்தரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஒரு பெருவிழா எடுத்தான் ரீவல்லபன். அவரைப் பட்டத்து யானையின் மீதேற்றி நகர்வலஞ் செய்வித்தான். மங்கள வாத்தியங்கள் அதிர்ந்தன. வெண்கொற்றக்குடை நிழற்ற இருமருங்கும் கவரிகள் வீச, வித்துவான்கள் கட்டியம் கூற உலாவரும் ஆழ்வார்க்கு பட்டர்பிரான் என்ற விருதையும் அளித்துப் பாராட்டினான் பாண்டியமன்னன். இதனை அங்கீகரிப் பதுபோல் பண்டிதர்கள் யாவரும் கைகொட்டி வர வேற்றனர். மக்கள் திரள்களிமிடருந்து விஷ்ணுசித்தர் வாழ்க! பட்டர்பிரான் வாழ்க!” என்ற வாழ்த்தொலிகள்