பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் திசையிலுள்ள வையையின் பிரிவு இப்பொழுது கிருத மாலை' என வழங்கப்பெற்றுக் கூடலழகர் திருக்கோயிலின் புறத்தே ஒடுகின்றது மதுரைக் கோட்டையைச் சுற்றி வையை நதி மாலை போல் ஓடுதலால் வையைக்குக் கிருத மாலை’ என்ற பெயர் வழங்கியதாகக் கூறுவர். வேக மாதலின் வேக வதியென்றும் மாகம் வாய்ந்தத னால்வையை யென்னுந்தா ராக லாற்கிருத மாலைய தாமென்றும் நாகர் முப்பெயர் காட்டு கதியரோ" என்ற கூடற்புராணச் செய்யுள் கடறுவதைக் காண்க, கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையிலும், "இருகிலம் தார் முற்றியதுபோலத் தகை பூத்த வையைதன் ர்ேமுற்றி மதில்பொரூகம் பகையல்லா நேராதார் போர்முற்றொன் றறியாத புனல்சூழ்ந்த வயலூரன்' என்ற பாடற் பகுதியில் வையை நதி மாலை சூழ்ந்திருந் ததுபோல் வருணிக்கப் பெற்றிருப்பதும் நோக்கி அறியத் தக்கது. எனவே, நீடுநீர் வையை நெடுமால்' என்னும் தொடர் மேற்கூறியவற்றால் மதுரைக்கூடலழகர் சந்நிதி யையே குறித்ததாதலைக் கண்டு தெளிலாம். இங்கனம் நம்மனம் பண்டைய இலக்கியங்களில் அலைபாய்ந்த வண்ணம் இருக்கும்பொழுது இருப்பிடத் திற்குத் திரும்பும் நேரமும் வந்துவிடுகின்றது. சட் டென்று எழுகின்றோம். கொடி மரத்தின் அருகிலிருந்த 19. கூடற்புராணம், 20. மருதக்கலி-2