பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

பாண்டிமாதேவி / முதல் பாகம்


அரண்மனையிலிருந்து வந்திருக்கிறார்கள்” என்று கூறினாள்.

“எப்போது வந்தார்கள்?” என்று வியப்புடன் அந்தப் பெண்ணைக் கேட்டாள் குழல்மொழி.

‘இப்போதுதான் படகிலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தங்களை அவசரமாகச் சந்திக்க வேண்டுமாம்.”

“இப்போது எங்கே இருக்கிறார்கள்?”

“மாளிகையின் கீழ்ப்பகுதியின் மெய்க்காவல் வீரர்களிடம் ஏதோ பேசிக் கொண்டு நிற்கிறார்கள்.”

“அங்கேயே இருக்கச் சொல்! இதோ நானே வருகிறேன்.”

பணிப்பெண் இதைப் போய்ச் சொல்வதற்குக் கீழே இறங்கிச் சென்றாள். சில விநாடிகளில் குழல்மொழியும் கீழே இறங்கிச் சென்றாள்.

பாதி இறங்கிச் சென்று கொண்டிருக்கும்போதே நாராயணன் சேந்தன் யாரிடமோ இரைந்து பேசிக் கொண்டிருப்பது அரைகுறையாக அவள் காதில் விழுந்தது.

‘யாரைச் சொல்லி என்ன ஐயா குற்றம் ? மகாமண்டலேசுவரரின் புதல்விக்கு அவர் அதிகமாகச் செல்லம் கொடுத்து விட்டதால் வந்த வினைதான் இவ்வளவும்”சேந்தனுடைய இந்த சொற்களைக் கேட்டு நடந்து கொண்டிருந்தவள் அப்படியே திகைத்துப்போய் நின்றாள்.


35. நெஞ்சமெனும் கடல் நிறைய...

கீழே மணற் பரப்பிலிருந்து மதிவதனியின் பெயரைச் சொல்லி யாரோ அழைக்கும் குரலைக்கேட்டு முகத்தில் கலவரம் தோன்ற அவளைப் பார்த்தான் குமாரபாண்டியன். இரவு நேரத்தில் கடலோரத்துத் தனிமையில் உயரமான மரக்கிளையின் மேல் அப்படி ஒர் அழகிய பெண்ணோடு நிற்கும் இளைஞனை மூன்றாவது மனிதன் பார்த்தால் எவ்வளவு தவறாகக் கற்பனை