பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பாண்டியன் நெடுஞ்செழியன்

களைக் கண்டு அந்தி வந்ததை அறிந்துகொண்டார்கள். இரும்பாற் செய்த விளக்கிலே நெய் தோய்ந்த திரியைக் கொளுத்தி நெல்லையும் மலரையும் தூவித் தெய்வத்தை வணங்கி எங்கே பார்த்தாலும் விளக்கை ஏற்றுகிறார்கள். வளமுடைய அங்காடித் தெரு முழுவதும் விளக்குகள் வரிசை வரிசையாகச் சுடர் விடுகின்றன.

வீட்டிலே வாழும் புறாக்களுக்கு இரவென்றும் பகலென்றும் தெரியவில்லை. ஆண் புறாவும் பெண் புறாவும் வெளியிலே சென்று இரை தேர்ந்து அருந்தி வருவது வழக்கம். இப்போது ஒன்றும் செய்யாமல் வீட்டிலே கொடுங்கையைத் தாங்கும் பலகைகளில் தலைமாறித் தங்கியிருக்கின்றன.

பெரிய வீடுகளில் சந்தனம் அரைப்பதற்காகவே சில வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். வடநாட்டிலிருந்து வந்த சந்தனக் கல்லிலே தென் திசையிலிலுள்ள பொதியிலிலிருந்து வந்த சந்தனக்கட்டையை அரைத்துத் தருவார்கள். இப்போது அவர்களுக்கு வேலை இல்லை. சந்தனத்தை யார் பூசிக்கொள்கிறார்கள்? கல்லும் கட்டையும் சும்மா கிடக்கின்றன.

ஆசையோடு மலர் மாலைகளைப் புனைந்துகொள்ளும் மகளிர் இப்போது சில பூக்களை மாத்திரம் செருகிக் கொள்ள எண்ணுகிறார்கள். கூந்தல் ஈரம் போக வேண்டுமல்லவா? அதற்காக அகிலையும் கண்ட சர்க்கரையையும் நெருப்பிலிட்டுப் புகைத்துக் கூந்தலை ஆற்றுகிறார்கள்.

நுட்பமான வேலைப்பாட்டுடன் செய்த் விசிறிகள் உறையிலே கிடந்தபடியே முளைகளில் தொங்குகின்