பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதனார் படைத்த பாட்டு

69

வாக நடத்த அமைச்சரும் பிறரும் முயன்றனர். அரசனுக்கு அறிவுரை வழங்கும் நூலானாலும் அதிற் பெரும்பகுதி மதுரையின் சிறப்பைச் சொல்வது. ஆதலின், நூல் எப்போதும் யாவருக்கும் இனிமை தருவதாக அமைந்தது.

அரங்கேற்றம் நடைபெற்றது. அரசன் நூல் முழுவதையும் கேட்டான். தன் முன்னோர்களின் பெருமையைக் கூறும் பகுதியைக் கேட்டு அவன் தோள்கள் பூரித்தன. நல்ல மன்னருடைய நாட்டில் தீங்கின்றிக் கோள்கள் வழங்கும் என்றுள்ள பகுதியைக் கேட்டு அவன் மகிழ்ந்தான். தன்னுடைய வீரத்தையும் வண்மையையும் விரிக்கும் இடத்தில் நாணினான். பாண்டி நாட்டில் ஐவகை நிலங்களும் இருத்தலை விரிவாக எடுத்துக் காட்டும் பகுதிகள் அவனுக்குப் பெருமிதத்தை உண்டாக்கின. மதுரையைத்தான் எவ்வளவு நன்றாக ஓவியத்திலே வரைந்து காட்டுவதைப் போலக் காட்டினார் புலவர்! அந்தப் பகுதிகளைக் கேட்கக் கேட்க அவன் உடம்பு பூரித்தது; உள்ளம் துள்ளியது.

“ஒரு செய்தியைச் சொல்கிறேன். நீ கேட்டருள வேண்டும்” என்று பாட்டில் வருகிறது. அதைக் கேட்டுப் பின்னும் ஆர்வத்தோடு கேட்கலானான். “முன்னே உலகை ஆண்டு செல்வம் ஈட்டி வாழ்ந்த மன்னர்கள் கணக்கில்லாதவர்கள். கடல் மணலை எண்ணினாலும் எண்ணலாம்; அவர்களை எண்ண இயலாது. அவ்வளவு பேரும் வாழ்ந்தார்கள்; பிறகு மாண்டுபோனார்கள்” என்று வாழ்க்கை நிலையாமையை