பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
71
மருதனார் படைத்த பாட்டு

அவருடன் பழகியவர்கள் அவரைச் சுட்டிக் கூறுவார்கள். மற்றவர்கள், பெயரைக் கூறுவது மரியாதையன்று என்று மாங்குடி கிழார் என்று சொல்வார்கள். மதுரைக் காஞ்சி என்ற பாட்டை அவர் இயற்றி அரங்கேற்றிய பிறகு அவரை யாவரும் மதுரைக் காஞ்சிப் புலவனார் என்று வழங்கத் தலைப் பட்டனர்.

இனி, அந்த மதுரைக் காஞ்சியாகிய சொல்லோவியத்தில் உள்ள பொருள்களை ஓரளவு பார்க்கலாம்.