பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இத்தலத்தை மகோதர மகரிஷியும் நாகராஜனும் வழி பட்டுத் திருவருள் பெற்றனர். மலைமீதுசென்ருல் வைரவர் சங்கிதியைக் கண்டு தரிசிக்கலாம். சுவாமி சங்கிதியில் உள்ள திருக்கல்யாணக் கோலக்காட்சி கண்டு களித்தற் குரியதாகும். இத்தலத்தில் கார்த்திகைத் தீபதரிசனம் விசேடமானது.

இத்தலத்தில் தேவ சபாமண்டபம், சுந்தர பாண்டியன் மண்டபம், ஆறுகால் மண்டபம், லட்சுமிமண்டபம், விசுவ காதர் கோயில், சுப்பிரமணியர் கோயில் முதலியன கரணத் தக்கவை. கிராமத்தில் சொக்கநாதர் கோயில் இருக்கிறது.

இத்தலத்து இறைவர் கொடுங்குன்றீசர் என்றும், இறைவியார் குயிலமுத நாயகி என்றும், கூறப்படுவர். தேவாரத்தில் இவ்வம்மையார் தேனிற்பொலி மொழியாள் என்று குறிப்பிடப்படுகின் ருர்.

இத்தலம் இராமநாதபுரம் ஜில்லா சிவகங்கைக்கு 23 மைல் துாரத்தில் உள்ள திருப்பத்துாரை அடைந்து அங் கிருந்து வடமேற்கு 15 மைலில் உள்ளது. திருப்பத்துார் அறந்தாங்கி ஸ்டேஷனிலிருந்து 27 மைலில் உள்ளது. இத் தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது:

முதல் திருமுறை 14-வது பதிகம் பண் கட்டபாடை 1. வானில்பொலி வெய்தும் மழைமேகம்கிழித் தோடிக்

கூனல்பிறை சேரும்குளிர் சாரல்கொடுங் குன்றம் ஆனில்பொலி ஐந்தும்அமர்ந் தாடிஉலக மேத்தத் தேனில்பொலி மொழியாளொடும் மேயான்திரு நகரே.

(அ. சொ.) பொலிவு-விளக்கம், எய்தும்-அடையும், ஆனில்-பசுவில், ஐந்தும்-பால், தயிர், நெய், கோமயம்