பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

அடி அறிவிக்கின்றது. இத்தலத்தில் ஆடலும் பாடலும் அனவரதடிம் இருந்துவரும். இத்தலம் பழம் புகழையும் அழகையும் கொண்டது. தென்றல் காற்றின் இன்பத்தை இங்கு துய்க்கலாம். "தென்றல் ஆர்ந்த புனவாயில்” என் னும் தொடரைக் காண்க.

இத்தலம் கடற்கரையைச் சார்ந்திருப்பதால் சங்கும் சிப்பியும் கொண்டு கடல் அலை கரையில் எறிந்துகொண் டிருக்கும். இத்தலம் நலம் மிக்கது. சோலைகளும் இத் தலத்தில் உண்டு. அச்சோலை மலர்களே மலர்த்திக் குளிர்ந்து காணப்படும். இத்தலத்தைப் போற்றுபவர் வேதனை குறைந்து இனி வரக்கடவதாகிய வினையும் நீங்கப்பெறுவர். "வேதனை நாள் தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே” என்ற அடியினைக் காண்க.

திருஞானசம்பந்தர் காலத்தில் சமண மதப்பிரசாரம் மிகுதியாக இருந்தது. அதனல் பலர் சைவசமயம் விட்டுச் சமண சமயம் புகுந்தனர். அத்தகையவர்கட்கு நல்லறிவு கொளுத்தச் சம்பந்தர், "மக்களே! சமணர் சாதி உரைப் பன கொண்டு அயர்ந்து தளர்வு எய்தன்மின்' என்று கூறி யருளினர்.

இறுதிப் பாட்டில் இப்பதிகப் பாடல்கள் குற்றம் அற்றவை என்பதும், இப்பாடல்களைப் போற்ற வல்லவர் கட்கு அருள் சேரும் என்பதும், திருஞானசம்பந்தர் கற்றவர் களால் புகழ்ந்து போற்றப்படுவர் என்பதும், தம்மைத் தமிழ் உணர்ந்த ஞானசம்பந்தர் என்று கூறிக்கொள்வதில் திருஞானசம்பந்தருக்கு இருக்கும் ஆர்வமும் தெரியவரு கின்றன. 'கற்றமிழ்” என்ற அடைமொழியாலும், "கன்மை யால்' என்ற பின் மொழியாலும் கூறப்பெற்றுள்ள கருத்தை நோக்குக.