பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

சுந்தரர் வாழ்க்கை வரலாற்றுக் குரிய அகச் சான் றையும் காண்க. திருஞானசம்பந்தரைப் போன்று பதிகம் பாடும் பத்தர் பெறும் பேற்றைச் சுந்தரர் கூறும் வழக்கம் உண்டு. அந்த முறையில் இப்பதிகத்தைப் பாடுவார் பத்தராய் கல்ல குணத்தராய் எத்திக்கும் கிறைந்த புகழுடையராய் மண்டலத் தலைவர்களாய் வாழ்வது உறுதி என்று கூறுகிருர் சுந்தரர். இப்பதிகம் இறைவர் தோற்றங்களைப் பலவாக எடுத்து இயம்புகிறது. இறைவர் தன்மைகளும் எடுத்துப் பேசப் படுகின்றன. அருந்தொடர்கள்:

'மூவர் உருத்தனதாம் மூலமுதல்," "மெய்யே பற்றும் அவர்க்கு அழுது, 'தொண்டர் தமக்கு எளியசோதி," 'பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனே, "ஒண்சீர் உறை தண் தமிழ்.”

11. திருப்பூவணம்

இது பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் பதினேராவது ஆகும். இதனைப் புஷ்பவனம் என்றும், காசிக்கு நிகரான தலம் எ ன் று ம் கூறுவர். இத் தலத்தில் பொன்னனையாள் என்னும் பரதநாட்டியம் செய் யும் மாது, மிகுந்த பக்தியுடையவளாய்த் திகழ்ந்தாள். அவள் சிவபெருமான் அருளால் சோமாஸ்கந்த மூர்த்தம் செய்து அதன் அழகைக் கண்டு கன்னத்தைக்கிள்ளி முத்தம் இட்டுக்கொண்டனள் என்ற குறிப்பை இத்தலத்துச் சோமாஸ்கந்தர் வடிவத்தின் கன்னத்தில் அமைந்துள்ள ககக் குறியால் உணரலாம். இதல்ை இத்தலத்து இறைவர் அழகியபிரான் என்றும் கூறப்படுகின்றனர். இத்தலத்தை அப்பர். சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் பாடி யுள்ளனர். அப்பர் பாடிய பதிகம் ஒன்றும், சம்பந்தர் பாடிய பதிகம் இரண்டும், சுந்தரர் பாடிய பதிகம் ஒன்றும் ஆக நான்கு