பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

பாடினதாக இரண்டு பதிகங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று திருக்குற்ருலம் பற்றியும், மற்ருென்று குறும்பலா என்பது பற்றியும் ஆகும். குற்ருலம் என்பது ஒருவகை ஆலமரம். இதுவே இத்தலத்து விருட்சம். குறும்பலா என்பது கோவில் பெயர். இதுவும் குறும்பலா என்ற தலவிருட்சம் காரணமாக ஏற்பட்ட பெயர். ஊர்ச் சிறப்பையும், கோவில் சிறப்பையும் தனித்தனியாகப் பாடிக் காட்டவே இரண்டு பதிகங்களைப் பாடினர் போலும்!

இத்தலம் கடராஜப்பெருமானுக் குரிய ஐந்து சபை களில் ஒன்ருன சித்திர சபை இருக்கும் இடமாகும்.

இத்தலம் ஒரு காலத்தில் விஷ்ணு தலமாக இருந்தது. இவரைத் தரிசிக்க அகஸ்தியர் இங்கு வந்துற்ருர். அகஸ்தி யர் திருநீறுபூசிய திருமேனியராய் இருக்கக்கண்ட திருமால் கோவில் பட்டாசாரிகள் முனிவரை உள்ளே செல்லாத வாறு தடுத்தனர். பிறகு அகஸ்தியர் வைணவ பாகவத வேடம் பூண்டுவர, அவர்கள் அவரை வரவேற்றுக் கோவி லுக்குள் அழைத்துச் சென்றனர். அகஸ்தியருக்கு உள் இருப்பவர் திருமால் என்பது தெரியும். வைணவ பட்டா சாரியர்களை அடக்க, மூலஸ்தானத்தில் திருமால் திருவுரு வின் உச்சியில் உள்ளங்கையை வைத்து அழுத்திக் 'குறுகு குறுகு" என்று கூறத் திருமால் குறுகிவிட அங்குச் சிவலிங்கம் தோற்றம் அளித்தது. அதனைக் கண்டுதரிசித்து வெளியே வந்தனர். திருமால், சிவலிங்கமாகி இருப்பதைக் கண்டு வெட்கித் தாம் செய்த குறும்புக்காக வைணவர்கள் வருந்தினர்கள். அன்று முதல் இத்தலம் சிவதலமாயிற்று.

இத்தலத்திற்குத் திரிகூடம் என்ற பெயரும் உண்டு. குற்ருலமலை மூன்று சிகரங்களேச் சிறப்பாகப் பெற்ற மையே இதற்குக் காரணம். இங்கு மூன்று அருவிகள் சிறப்பாகப் பேசப்படுகின்றன. ஒன்று தேனருவி என்பது. இது 100 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இரண்டாவது