பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

முன்னர் இயற்கைக் காட்சி எவ்வாறு எடுத்து இயம் பப் பெற்றுள்ளது என்பதைக் காண்போமாக. குற்ருல மலையில் ஏலம், கிரும்பு முதலான மணமுடைய மரங்கள் வளர்ந்திருத்தலின் நறும் மணமுடையதாகும். சாரல்கள் நீண்டு உயர்ந்து காணப்படும். வேங்கை மரங்கள் நாளும் நாளும் வளர்ந்து கிளைகள் பெருத்துக் காணப்படும். சோலே களில் வண்டுகள் யாழ்போல இனிது இசைத்துக் கொண் டிருக்கும். செண்பகம் வேங்கை மரத்தில் படிந்து இருக் கும். முல்லை மலர்கள் அரும்புகளை ஈனும். வாழைக் கனி களும் பலாக்கனிகளும் மாங்கனிகளும் மிகுந்து தொங்கிக் கொண்டிருக்கும். பெண் குரங்குகள் தம் மடியில் குட்டி களேத் தழுவிக்கொண்டு, வாழைப் பழங்களைத் தின்று கொண்டிருக்கும். மலேப் பக்கங்களில் தினைப்புனங்கள் கிறைந்து, அவற்றில் தினைப் பயிர் நன்கு முற்றி இருக்கும். கிலேயில் கிளிகள் வந்து உண்ணும்போது, தினேப்புனம் காக்கும் இளம் பெண்கள், மலையில் கிடைக்கும் நாகமணி களே வாரிக்கொண்டு வந்து அவற்றைத் தினக்கதிர் உண்ண வந்த கிள்ளைகள் மீது எறிந்து ஒட்டிக்கொண்டிருப்பர். மயில்கள் ஆணும் பெண்ணுமாக ஆடிக்கொண்டிருக்கும். நீல நிற கெய்தல் மலர்கள் சுனைகளில் மலர்ந்து காணப்படும். மலையினின்று வீழும் அருவிகள் மலர்களையும், பொன்னேயும் சிறிது சிறிதாகச் சிங்கிக்கொண்டிருக்கும் குராமலர், பாம் பின் பற்களைப்போல் அவ்வளவு கூர்கையான அரும்புகளே ஈன்று மணம் வீசிக்கொண்டிருக்கும். வண்டுகள் தம் தம் பெடை வண்டுகளுடன் கூடி, குருந்த மமரத்தில் ஏறிச் செவ்வழி என்னும் பண்ணினேப் பாடிக்கொண்டிருக்கும், காந்தள் மலர்கள், வளமான அரும்புகளை ஈன்று, கை குவித்துக் குற்ருல நாதரை வணங்குவது போலக் குவித்து காணப்படும்.