பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

பாண்டிய மன்னர்

வருந்தி இரங்கி நினது அடி நிழலின்கட் பழகிய அடியுறை போல வாழ்வோம். நீ இவ்வாறு யாம் மனம் வருந்தச் செய்த செய்கையை மறவாதொழிவாயாக.”

நன்மாறன்:- புலவரே, அரசியற்றுறையில் பெரிதும் ஈடுபடுவதால் நும்போல்வாரைத் தக்கவாறு ஆதரிக்க இப்பொழுது என்னால் இயல்வதில்லை. இப்பரிசிலைப் பெற்றுக்கொண்டு விடை பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

பெரிய சாத்தனார்:- அரசே, பெறும் பரிசில் சிறிதேயாயினும், அன்போடு உதவும் வள்ளலரிடம் ஆதரவோடு பெறுதலே புலவர் இயல்பாம். ஆகையால், நம் இருவர்க்குள் நிகழ்ந்த இப்பேச்சுப் பிறர்க்கும் தெரியும் பொருட்டு எமது கருத்துக்களைச் செய்யுளாக்கித் தெரிவித்துப் பிறகு பரிசில் பெறுவோம், செய்யுட்குச் செவி சாய்ப்பாயாக:

“அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பிற் றண்டாக்
கடவுள் சான்ற கற்பிற் சேயிழை
மடவோள் பயந்த மணிமரு ளவ்வாய்க்
கிண்கிணிப் புதல்வர் பொலிகென் றேத்தித்
திண்டே ரண்ணல் நிற்பா ராட்டிக்
காதல் பெருமையிற் கனவினும் அரற்றுமென்
காமக நெஞ்சம் ஏமாந் துவப்ப
ஆலமர் கடவுள் அன்னநின் செல்வம்
வேல்கெழு குருசில் கண்டே னாதலின்
விடுத்தனென் வாழ்கநின் கண்ணி தொடுத்த

தண்டமிழ் வரைப்பகம் கொண்டி யாகப்