பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V

றைவன் திருவருட் செயலை அளவிட வல்லார் எவரே? ஒருவன் சிவிகைமீது அமர்வோனாகவும், மற்றொருவன் அதனைப் பொறுப்பவனாகவும் அமைவதும்; ஒருவன் புரவலனாகவும், மற்றொருவன் அவனிடம் கையேந்தி நிற்றற்குரிய இரவலனாகவும்; ஒரு தாய் வயிற்று மக்களுள்ளே ஒருவன் சிறந்த அறிவுடையானாகவும், மற்றொருவன் நிரக்ஷர குக்ஷியாகவும் மந்த மதியாகவும் இயன்றிருப்பதும் அவனருட் செயலன்றோ? பிறந்தன இறத்தலும், இறந்தன பிறத்தலும், கண்டனமறைதலும், முன்னர்க் காணாதன காண்டலும் பிற அற்புதங்களும் அவனுக்கு இயல்பேயன்றோ? எண்ணிறந்த மக்களும் பற்பல மன்னரும் தம்மைப் பணிய முடி மன்னராய் அரசாண்டவரும், திக்கற்றுத் திருமகள் பகைஞராய்த் திரிந்தவரும் முடிவில் ஒரு பிடி சாம்பர் ஆதல் அமைவுதானே? இன்ன காலத்தில் இன்ன இடத்தில் இவர்க்கு இன்னது விளையும் என்று எத்தகை அறிவுடையோராலும் அறுதியிட்டுரைக்கக் கூடாமல் இருப்பதன்றோ இறைவன் திருவருட் செயலிற் பெருத்த அற்புதமாம்?

பாண்டிய மண்டலாதிபதியாய்த் தமிழ் நாட்டரசர் தலைவனாய் வணங்காமுடி மன்னனாய் வாழ்ந்து வந்த நன்மாறன் போர்க்களங்களிலும் அரசியற்றுறை யாராய்ச்சி-