பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த...நெடுஞ்செழியன்

109

"செங்கோற் றென்னவன் காக்கும் நாடென எங்கணும் போகிய இசையோ பெரிதே," என்று புலவர் பெருமக்கள் புகழ்ந்து பாராட்டத் தக்கவாறு அவனது செங்கோன்மை சிறந்திருந்தது. உயர்ந்தவர் தாழ்ந்தவர், கற்றவர் கல்லாதவர், உறவினர் அயலவர், உள் நாட்டவர் அயல் நாட்டவர் என்ற பேதமின்றி எல்லார்க்கும் ஒரு நிகராக அறம் புரிந்து நீதி செலுத்தி வந்தானாகையால் அவனது நியாய பரிபாலனத்தைப் பற்றிய புகழும் பெருமையும் எங்கும் பரவியிருந்தன. நெடுஞ்செழியனது செங்கோன்மைச் சிறப்பை விளக்க அக்காலத்தில் பின் வரும் நிகழ்ச்சி நிகழ்ந்தது:

சோழ நாட்டிலே வாழ்ந்திருந்த பராசரர் என்ற ஒரு வேதியர் சேரனது கொடைச் சிறப்பைப் பற்றிக் கேள்வியுற்று, பாலைக் கௌதமனார்க்குச் சுவர்க்கம் கொடுத்த இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற அச்சேரவரசனைக் காண்டல் வேண்டும் எனக் கருதி, காடும் நாடும் ஊரும் கடந்து சென்றார். மலய மலை பிற்படச் சென்று, சேர நாட்டிற் புகுந்து, முத்தீப் பேணும் ஒன்று புரி கொள்கை இரு பிறப்பாளர் பலரைக் கண்டு, வேதமோது முறையில் அவர்கள்ளோடு வாதம் செய்தும் யாகங்கள் செய்தும் அநேகரை வென்று, பார்ப்பன வாகை சூடினர். அரசராலும் பிறராலும் நன்கு மதிக்கப் பெற்று அநேகம் பொற்கலங்களைப் பெற்றனர். அவற்றை யெடுத்துக்கொண்டு தம் ஊர்க்குத் திரும்புங் காலையில் பாண்டிய நாட்டில் உள்ள திருத்தங்கால் என்ற ஊரையடைந்தார். அவ்வூரில் இலைகள் நிரம்பியதோர் அரச மரத்தடியில் உள்ள மன்றம்