பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

பாண்டிய மன்னர்

ஒன்றில், தண்டம், குண்டிகை, வெண்குடை, சமிதை, பண்டச் சிறுபொதி, பாதக் குறடு முதலியவற்றை வைத்துவிட்டுத் தாமும் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

அப்பொழுது அவ்வூர்ப் பிராமணச் சிறுவர் சிலர் அங்கு வந்தனர். அவர்களைக் கண்ட பராசரர் தம்மை ஆதரித்த சேரனை மனமார வாயார வாழ்த்திவிட்டு, அச்சிறுவர்களைப் பார்த்து, என்னோடு ஒப்ப முறை வழுவாமல் வேதம் ஓத வல்லவர் என்னிடம் உள்ள பண்டச் சிறுபொதியை எடுத்துக்கொள்ளலாம் உங்களுக்குள்ளே வேதம் ஓதப் பயின்றவர் வரலாம், என்று கூறினர். வார்த்திகர் என்ற வேதியர் புதல்வன் தக்ஷிணா மூர்த்தி என்ற பெயருடையான் ஒருவன் இளங்குதலை வாயராகிய அப்பிரமசாரியர் குழுவினுள் முன் வந்து, தளர் நாவாயினும் வேத சுருதி முறை வழுவாது உளமலி யுவகையோடு பராசரர்க் கொப்ப வேதம் ஓதினன். அதனைக் கேட்டு மகிழ்ந்த அப்பெரியார் சேர நாட்டிலே தாம் பெற்ற கடகம் தோடு முத்தப் பூணூல் முதலிய பொற்பணிகளை யெல்லாம் எடுத்து வைத்துத் தக்ஷிணா மூர்த்தியை மனப் பூர்வமாக ஆசீர்வதித்து, அவற்றை அவனுக்குக் கொடுத்து விடை பெற்று ஏகினர்.

தக்ஷிணா மூர்த்தி யென்ற அவ்வேதியச் சிறுவன் பராசரரிடம் பெற்ற பொற்பணிகளைப் பூண்டு ஊர்க்குட் சென்றதைக் கண்ட மற்றவர்கள் அவனுக்கு வந்த வாழ்வைக் கண்டு பொறாமல், அரச சேவகருட் சிலரைத் தூண்டினர். அவருள் அற்பர் சிலர் உரிய முறையான் அன்றி அரும்பொருளைக் கவர்ந்து வந்த பார்ப்பான் இவன் என்று தக்ஷிணாமூர்த்தி தந்தையாராகிய வார்த்-