ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்
113
பொருளென்று கல்வியைக் கருதித் தேட வேண்டும் என்பதன்றோ? அதனைத் தேடுவது எவ்வாறு? கல்வி என்ற செல்வத்தை உதவ வல்ல பெரியாரை முதலில் அறிய வேண்டும். அப்பெரியாரை யடுத்து அவர்க்கு வேண்டும் உதவி செய்தும், தன்னால் இயன்ற வளவு பொருள் கொடுத்தும், தன் நிலைமைக் கேற்ப ஆசிரியர்க்கு இயற்ற லாகும் பணிவிடைகள் புரிந்தும் கல்வியைத் தேடுதல்வேண்டும் ஒரு தாய் வயிற்று மக்களாயிருப்பினும் குழந்தைகளிடம் அன்பு கொள்ளுவதில் சிறிதும் வேற்றுமை யறியாது தாயும் அறிவுடை மகனையே சிறப்பப் பாராட்டி அன்பு செய்யக்காண்போம். ஒரு குடும்பத்திற்பிறந்தபலருள்ளும் அரசியற் பணிக்கு வேண்டிய ஒருவனைத்தேர்ந்தெடுக்கவேண்டு மாயின், அக்குடியின் மைந்தருள் மூத்தவனை வருக என்று அழையாமல், அறிவுடைய ஒருவனையே ஆராய்ந்து அழைத்து, அவனுக்கு ஏற்ற பணியில் அமர்த்துவோம். அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்ற நால்வகைக் குலத்தினருள்ளும் கீழ்க் குலத்தான் ஒருவன் கல்வி வல்லவனாய் இருப்பின், மேற்குலத் தானைக்காட்டிலும் சிறப்பையே பெறுவன். மேற் குலத்தவனே யாயினும், கல்வியறி வில்லாதவன், அக்கல்வியறிவால் உயர்வு, பெற்ற கீழ்க்குலத்தானிடம் அடங்கி நடத்தற் குரியவனே. ஆகையால், உலகில் ஒருவர் பெறும் உயர்வுக்குக் காரணம் அவரிடம் உள்ள கல்வியேயன்றி வேறொன்று மன்று. ஆகையால், குழந்தைகளே, நீவிர் எல்லீரும் கல்வியிலே சிறந்த கருத்துடையராயிருந்து எதிர்காலத்தில் நீர் பிறந்த நாட்டுக்கு வேண்டும் பணியியற்ற அறிவும் உரிமையும் பெறத் தகுதி யுடையர்களாக ஆகவேண்டும் என்பதே எனது பெரு நோக்கமாம். இறைவன் என் வேண்டு கோளை நிறைவேற்றுவானாக.”
அரசர் பெருமான் நிகழ்த்திய இவ்விரண்டரும் பேருரையைக் கேட்ட புலவரெலாம் மகிழ்ச்சி மிக்கனர். தமிழ்ப் பெருங்கணக்காயர் மாணவர்களை மனமார
- 8