பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

பாண்டிய மன்னர்


வேப்ப மலர் மாலையுடையானாகிய பாண்டியன் நெடுஞ்செழியன், ஊர் காவலரை யழைத்து, “எனது தேவியின் காலணியாய சிலம்பு இவன் சொன்ன களவுத் தொழிலிற் றழும்பேறிய கள்வன் கையகத்திருக்கு மாயின், அச்சிலம்பை இப்பொழுது ஊடல் தீர்த்தற்கு உதவியாகுமாறு அவனைக் கொன்று இவ்விடத்தே கொணர்வீராக,” என்றுவினைவிளைகின்ற காலமாதலின், சிறிதும் தேறாது கூறினன். பாண்டியன் அப்பொழுது கூறவெண்ணியது அச்சொல் அன்றாயினும், கோவலனுக்கு வினை விளை காலம் ஆகைபாலும், அவனுக்கு வினைவிளைகாலம் ஆகையாலும் கொல்ல என்று சொல்ல எண்ணியது கொன்று என்று மாறி வந்துவிட்டது. அங்ஙனம் ஏவல்தந்த அரசன் ஏவலரையும் உடனனுப்பியதால் கருந்தொழிற் கொல்லன் தான் எண்ணிய எண்ணம் நிறைவேறியதாய் எண்ணித் தீவினை யுருவமாய்த் தன்னைச் சூழ்ந்து வரும் வலைக்குள்ளே விழும் நிலையில் இருந்தும் அதனை அறியாதிருந்த கோவலனைக் குறுகினான்.

“வெற்றி மிக்க படைஞரை யுடைய பாண்டிய மன்னன் ஏவலால் சிலம்பு காண வந்தோர் இவர்,” என்று கூறிப் பொய் வினைப்பொற்கொல்லன் சிலம்பின் செய்வினைச் செய்தி யெல்லாம் அவர்கள் அறியுமாறு தனித்து அழைத்துப் போய்க் கூறினன். அப்பொழுது சிலம்பு வைத்திருந்த கோவலனைக் கண்ட காவலர், இவன் உடம்பின் தோற்றத்தாலும் முகக் குறிகளாலும் ஆராய்ந்தால், நீ கள்வன் என்று கூறும் அவனாகத் தோன்றவில்லை. இக்குற்றத்துக்காகக் கொலை செய்யப்