பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IV

பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்த கோப்பெருந்தேவி, சூரிய உதய காலத்துக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு கொடுங் கனவைக்கண்டு, தன் தோழியரிடம் கூறுவர்ளாயினள். கோப்பெருந்தேவி, தோழியரே, அரசர் வெண்கொற்றக் குடை விழவும், செங்கோல் சரிந்து விழவும், ஆராய்ச்சி மணி நின்று நடுங்கவும் காண்பேன். அன்றியும், எட்டுத் திசைகளும் அதிர்கின்றன. கதிரை இருள் விழுங்கவும் காண்பேன். மின்னற் கொடி இரவிலே தோன்றி விழும். சூரியனும் நக்ஷத்திரங்களும் பகலிலே தோன்றி விழக் காண்பேன். என்ன விளையுமோ! செங்கோலும் வெண்குடையும் நிலத்து மறிந்து விழுதலாலும், நம் அரசர் பிரானது அரண்மனை வாயிலில் உள்ள ஆராய்ச்சி மணி நடுங்குதலாலும், என் உள்ளம் நடுங்கும். இரவிலே மின்னல் விழுதலாலும், பகலிலே விண்மீன்கள் விழுதலாலும், எண்டிசைகளும் அதிர்தலாலும் நமக்கு விரைவிலே பெருத்ததொரு துன்பம் விளையும் எனத்தோன்றுகிறது. அரசர் பெருமானிடம் இதனை நாம் தெரிவிப்போம்,” என்று கூறினள்.

உடனே அரசன்றேவியின் சிலதியராகிய பெண்டிர் பலர் அங்குக் கூடி, அவிர்ந்து விளங்கும் மணியிழையினராய், ஆடி, கலன், கோடி, பட்டு, செப்பு, வண்ணம்,