பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V

ண்ணகி, அரசன் இறந்ததையும், இராசமாதேவி மயங்கிக் கிடந்ததையும் பொருட்படுத்தாது, பின்னும் சில கூறினள். அவள் பேசியன அனைத்தும் இராசமாதேவி உயிர் போக்கும் அம்பும் வேலும் வாளும் ஆக இருந்தன. முழக்கம் மிகப் பேசும் பத்தினித் தெய்வத்தின் வஞ்சின மொழியை இராசமாதேவி மயக்கத்தினிடையே கேட்டாள். அவள் தன் தலைவன் நெடுஞ்செழியன் மயங்கி வீழ்ந்தான் என்று எண்ணி அவன் இறந்ததை அறியாதிருந்ததால் கண்ணகியை நோக்கி, “யாம் செய்த குற்றத்தைப் பொறுத்து எம்மைக் காப்பாற்றுக. பத்தினிக் கடவுளின் மிக்க தெய்வமுண்டோ?” என்று வணங்கி வீழ்ந்தாள்.

அதனைக் கேட்டும் கண்ணகி, “அரசன் தேவியே, மாபாவியாகிய யான் மாதர்க் கணிகலமாகிய பேதைமையே பூண்டு உலகவியல்பு ஒன்றும் தெரியாத இயல்பினை உடையேனாயினும், கூறுவதைக் கேட்பாய்: பிறனொருவனுக்கு முற்பகலிலே கேடு செய்தவன், பிற்பகலிலேயே தனக்குக் கேடு வருதலைக் காண்பான்.

“பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிறபகற் றாமே வரும்.”

என்பது அறவுரையன்றோ? பிறிதோர் ஊரிலே தான் மணம் புரிந்த செய்தியை நம்பாது தன்னை இழித்-