ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்
139
கிணற்றில் விழக்கண்டு தன் குழவியையும் கிணற்றிலே வீழ்த்துப் பிறர் எவரும் அறியத் தன் கற்பின் சிறப் பால் இரு குழவியரையும் எடுத்து வளர்த்துக்கொண்ட பெண் மணியும்; அயலா னொருவன் தன் முகத்தைத் தீய நோக்கத்தோடு பார்க்கக் கண்டு முழு மதி யொத்த ஒளி விளங்கிய தனது முகத்தைத் தன் கணவன் வருங் காறும், '‘குரக்கு முகமாயிருக்க,’ என நினைத்து அவ்வாறு அமையப் பெற்றுத் தலைவன் வந்ததும் இயற்கை யுருவத்தை யடைந்த ஏந்திழையும்; பெரியோர் கூறிய
“நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்
என்ற அறிவுரைக் கிணங்கப் பெண்கள் வண்டலாடுமிடத்தில், ‘யான் ஒரு மகளும் நீ யொரு மகனும் பெற்றால், அவ்விருவருக்கும் மணம் புரிவிக்கலாம்,’ என முன்னே தாம் பேசிக்கொண்டதை யெண்ணி அவ்வாறு செய்ய மனமின்றி வருத்தமுற்ற பெற்றோர் உரையை மறைந்து கேட்டுத் தன் தாயின் மனத்தில் எண்ணிய சிறுவனே தனக்குத் தலைவனாகுகவென மணப்பெண் போல ஆடையணி யணிந்து, பெற்றோர் ஆணை எதிர்பாராமலே அவனுக்கு மாலையிட்ட மங்கையர்க்கரசியும்; அவள் போன்ற பிற பெண்டிரும் பிறந்த புகார் நகரத்திலே பிறந்தேன். அறமுறைக்கேற்ப யானும் ஒரு கற்புடைப் பெண்ணாயிருப்பது மெய்யாகில், உங்களை இனி இவ்வுலகில் வாழவொட்டேன்; உங்கள் அரசாட்சியையும் அரசிற்கிடமாகிய மதுரையையும் அழிப்பேன். எனது இப்பிரதிஞ்ஞையின் முடிவை நீயே காண்பாய்,” என்று கூறி, அவ்விடம் விட்டகன்றாள்.